Politics

ராகுல் காந்தியை குறிவைக்கும் ED : பா.ஜ.கவை பீதியடைய வைத்த சக்கர வியூகம் பேச்சு!

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசை விமர்சிப்பவர்கள் மீது அச்சுறுதல்களும், தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து மக்கள் விரோத நடவடிக்கை அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி தங்களை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளை ஏவி அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

குறிப்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரை அமலாக்கத்துறையை வைத்து ஒன்றிய அரசு கைது செய்தது. இது குறித்தான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனக்கு எதிராக அமலாக்கத்துறையை ஏவி விட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளது அரசியல் விட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ”மகாபாரத்தில் சக்கர வியூகம் நடந்தது. மோடி ஆட்சியில் தாமரை வியூகம் நடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குருஷேத்ரா போரில் அபிமன்யுவை சக்கர வியூகம் அமைத்து கொன்றார்கள். அபிமன்யுவை கொன்ற 6 பேரை போலவே இப்போதும் ஒன்றிய அரசில் 6 பேர் தான் அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்" என ஒன்றிய அரசின் அதிராக வட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டினார் ராகுல் காந்தி.

இந்நிலையில்தான், ”எனது சக்கர வியூகம் பேச்சு இரண்டு பேருக்கு பிடிக்க வில்லை. அமலாக்கத்துறை சோதனை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நான் திறந்த கரங்களுடன் உங்களை வரவேற்க காத்திருக்கிறேன்” என சமூகவலைதளத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Also Read: ”அதானி - அம்பானி A1, A2” : நாடாளுமன்றத்தில் அனல் தெறிக்க பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி!