Politics
“இந்த ஆட்சியே தேசிய பேரிடர் ஆட்சிதான்” - ஒன்றிய பாஜக அரசு மீது கி.வீரமணி தாக்கு !
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காத ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திராவிடர் கழகத்தினர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி வீரமணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது கி. வீரமணி பேசியதாவது, “மிகக்குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட்டில், இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த நிதியும் தராமல், பாஜக கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கி மிகப்பெரிய அளவில் அநீதியை இழைத்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் மீதுள்ள கோபத்தை மக்களிடம் காண்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நம்மிடம் பணம் வசூலித்து நமக்கு கொடுக்காமல், அவர்கள் விரும்பியவர்களுக்கு கொடுப்பது எந்த வகையில் சம பகிர்வு ஆகும்? ஒரே ஒரு அரசுதான் இருக்க வேண்டும், பல மாநில அரசுகள் இருக்கக் கூடாது என பாஜக விரும்புகிறது. Cooperative federalism என்ற புது வார்த்தையை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அனைத்தும் ஏமாற்று வேலைதான்.
இது இந்திய பட்ஜெட்டா? அல்லது பாஜக கூட்டணியான பீகார், ஆந்திராவிற்கு கொடுக்கக்கூடிய பட்ஜெட்டா? என்ற கேள்வி எழுகிறது. எங்கெல்லாம் காவி ஆட்சி நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் நிதியை வாரி வழங்கியிருக்கிறார்கள். மெட்ரோ திட்டம் வரவில்லை என்றால் போக்குவரத்திற்கு நெருக்கடி இருந்திருக்கும். முன்பெல்லாம் இரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் இருக்கும். இப்போது அதற்கு தனியாக ஒதுக்குவதில்லை. திட்டக் குழுவை ஒழித்து மாநில உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு நாற்காலி இல்லை, இரண்டு கால்தான் இருக்கிறது. அந்த கால் ஆடிக்கொண்டிருக்கிறது. பிரதமருக்கு பயம். அதனால்தான் இவ்வளவு கோடி நிதி வழங்கியிருக்கிறார்கள். நாற்காலிக்கு பதிலாக ஃபெவிகால் ஒட்டி இருக்கிறார்கள். இது ஃபெபிகால் பட்ஜெட் சொந்தக்கால் பட்ஜெட் இல்லை.
தப்பித் தவறி கூட பாஜக வளர்ந்து விடக்கூடாது என தலைவராக அண்ணாமலையை நியமித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு பாஜகக்கு முடிவுரையை காட்டியிருக்கிறார் அண்ணாமலை. இதையெல்லாம் எடுத்துச் சொல்லி எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் சிறப்பாக ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு. நெருக்கடி சூழ்நிலையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தி முதல்வர் ஸ்டாலின் சிறந்து விளங்குகிறார்.
தமிழ்நாட்டில் road show வடநாட்டில் god show. எல்லா ஷோக்களும் back ஷோவாக முடிவடைந்துவிட்டது. நீங்கள் பிரிவினை கோரிக்கைக்கு மீண்டும் மீண்டும் உயிரூட்டுகிறீர்கள். மூன்று முறை ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள் இதுவரை வேறு காலத்திலோ காங்கிரஸ் ஆட்சியிலோ கொண்டுவந்த மிகப் பெரிய திட்டங்கள் போல் ஏதேனும் திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறீர்களா?
இந்த ஆட்சியே தேசிய பேரிடர் ஆட்சிதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மாநிலங்களுக்கு அள்ளி கொடுக்கிறீர்கள். ஆனால் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களில் கிள்ளிக்கூட கொடுக்கவில்லை. வரி விதிக்க மாநில அரசுகளுக்குதான் ராயல்டி உரிமை இருக்கிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் இருந்து அதிக ராயல்டி தொகைகளை தொடர்ந்து கேளுங்கள். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பற்றி சாதி குறித்து ஒன்றிய அமைச்சர் தெரிவித்தது நியாயமில்லை. இதுவரை நாடாளுமன்றத்தில் நடைபெறாத ஒன்று. இந்த போராட்டம் நியாயம் கிடைக்கும் வரை தொடரும்.” என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!