Politics

"நிதிஷ் குமார் டிசம்பருக்கு பிறகு பாஜக ஆட்சியை கவிழ்த்து விடுவார்" - RS பாரதி பேட்டி !

அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்தும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறையில் சரியான சிகிச்சை வழங்காததையும் விடுதலை செய்யக் கோரியும் வலியுறுத்தி இந்தியா கூட்டனி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, "இன்று அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஒன்றிய அரசின் ஆட்சி மக்களால் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி அல்ல . மீடியாக்களை வைத்துக்கொண்டு தேர்தலுக்கு ஒரு வார காலத்துக்கு முன்பாகவே நான் ஒரு இடம் 400 இடம் என்று போதித்து பல்வேறு கோயில் பிரச்சாரங்களை செய்து அதற்கு பின்னாலும் மைனாரிட்டி அரசாகத்தான் இன்று மோடி அரசு இருந்து கொண்டு இருக்கிறது. கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறுக்கு மக்கள் பாடம் புகற்றி உள்ளார்கள். இதே தமிழ்நாட்டுக்கு வந்த மோடி இந்த பகுதியில் ரோடு ஷோ நடத்தினார். அந்த ரோடு ஷோ நடத்தும் போது என்னென்ன பேசினார். ஒருமுறைக்கு எட்டு முறை வந்தார் எட்டு முறையல்ல முன்னுறுமுறை வந்தாலும் தமிழ்நாட்டில் உனக்கு இடம் இல்லை என்பதை நிரூபித்து காண்பித்துள்ளார்கள் இங்கு இருப்பவர்கள் .

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டினார்கள் அதை வைத்து ஊரை ஏமாற்றினார்கள். ஆனால் அதே அயோத்தியில் ஒரு பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒருவரை பொது தொகுதியில் நிக்க வைத்து வெற்றி பெற செய்தது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி. மோடியோட வெற்றி நியாயமான வெற்றியா இல்லை அறிவிக்கப்பட்ட வெற்றியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பிரதமர் மோடி கொஞ்சநஞ்ச பொய்யா சொன்னார் தமிழ்நாட்டுக்காரர்கள் எல்லாம் திருடன் என்று கூறினார். இந்த ஆட்சி அடுத்த நாடாளுமன்றம் வரை இருக்குமா என்று தெரியாது. பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் டிசம்பர் வரை பார்ப்பார், பின்னர் ஆட்சியை கலைத்து விடுவார்.

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதலமைச்சராக இருக்கிறார். அவருக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காமல் திகார் சிறையில் வைத்துள்ளார்கள். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மோடியை கிழி கிழி என்று கிழித்துள்ளார் .மூன்று திருமண சட்டங்கள் இந்தியா முழுவதும் உள்ள வழக்கறிஞர்களை பொதுமக்களையும் பாதிக்கக்கூடிய ஒரு சட்டம். அதை பத்தே நிமிடத்தில் நிறைவேற்றி உள்ளார்கள்.

இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் ராஜ்யசபா டிவியும் லோக்சபா டிவியின் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். பாஜகவினரால் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை, காத்து கூச்சல் போடுகிறார்கள், பேசவிடாமல் தடுக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு விரைவில் வரவேண்டும். அதேபோல் அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி இந்தியா முழுவதும் எந்தெந்த தலைவர்கள் தவறாக கைது செய்து உள்ளார்களோ அவர்களை விடுதலை செய்யும் வரை அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெரும் வரை இந்த அணி தொடர்ந்து போராட வேண்டும், போராடுவோம்" என்று கூறினார்.

Also Read: ராகுல் காந்தியை சாதி ரீதியாக விமர்சித்த பாஜக MP - பதிலடி கொடுத்த ராகுல் காந்தி...நடந்தது என்ன ?