Politics
ராகுல் காந்தியை சாதி ரீதியாக விமர்சித்த பாஜக MP - பதிலடி கொடுத்த ராகுல் காந்தி...நடந்தது என்ன ?
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளும் கூறி வருகின்றனர். அந்த வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் பட்ஜெட் தயாரித்த குழுவில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்? எத்தனை பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் ? எத்தனை பேர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனை இன்றைய விவாதத்தில் பதிலளித்து பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாகூர், தன்னுடைய சாதி என்ன என்றே தெரியாதவர் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு கோருகிறார் என ராகுல் காந்தியை குறிப்பிட்டு பேசினார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பைப் பற்றி நான் பேசுவதால் பாஜகவினர் என்னை அவமதிக்கிறார்கள்.நீங்கள் விரும்பும் அளவுக்கு என்னை அவமானப்படுத்துங்கள். எவ்வளவு அவமானப்படுத்தினாலும், எனது இலக்கில் நான் கவனமாக உள்ளேன். ஆனால், மறந்துவிடாதீர்கள், நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே தீருவோம்" என்று கூறினார்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!