Politics
“தமிழ்நாட்டிற்காக திட்டங்கள் ஏதேனும் வகுக்கப்பட்டுள்ளதா?” -ஒன்றிய அமைச்சகத்திடம் தயாநிதி மாறன் MP கேள்வி!
பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 23-ம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த பட்ஜெட்டில் தனது நாற்காலியை தக்க வைத்து கொள்வதற்காக, பாஜக தனது கூட்டணி கட்சிகளுக்கு என்று நிதி அறிவிப்பினை வாரி வழங்கியுள்ளது. தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஒன்றிய பாஜக அரசு நிராகரித்துள்ளது.
தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டிற்காக புதிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஏதேனும் வகுக்கப்பட்டு அல்லது முன்மொழியப்பட்டுள்ளனவா என்றும் அவ்வாறு திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தால் அத்திட்டம் செயல்படவுள்ள வழித்தடங்களை தனித்தனியாக குறிப்பிட்டு விளக்கமளிக்கவும் போன்ற பல்வேறு கேள்விகளை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் கழக நாடாளுமன்ற குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு :
- தமிழ்நாட்டிற்காக புதிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு அல்லது முன்மொழியப்பட்டுள்ளதா எனவும் அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும் என கேள்வி எழுப்பினார்
- அவ்வாறு திட்டம் வகுக்கப்பட்டிருந்தால், அத்திட்டத்திற்கான நோக்கம் குறித்தும், எந்தெந்த சாலைகள் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு விளக்கவும் என கேள்வி எழுப்பினார்.
- அவ்வாறு முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் உள்ளூர் மற்றும் சமூக பொருளாதாரம் எவ்வாறு வளர்ச்சி அடையும் என்றும், இத்திட்டங்களின் கட்டுமான பணிகளால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எந்த வகையிலும் இடையூறு வராது என்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?
- சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்றும், மேலும் இந்த புதிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் கட்டுமானத்தின்போதும் அதற்குப் பின்னரும் பாதுகாப்புத் தரங்கள் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?
- இந்த புதிய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் போன்றோரிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்கள் பெற ஒன்றிய அரசிடம் ஏதேன் திட்டம் உள்ளதா ?
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!