Politics
"இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றியவர் கலைஞர்" - ஆ.ராசா புகழாரம் !
சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி சீதை பதிப்பகத்தின் 32 நூல்கள் அறிமுக விழா நடைபெற்றது. இதில் திமுக துணை பொது செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு நூலினை அறிமுகம் செய்து வெளியீட தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் பெற்றுக்கொண்டார்..
தொடர்ந்து விழா மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, "கலைஞரே ஒரு தமிழ், கலைஞருக்கு தொண்டு செய்த உங்களுக்கு சாவில்லை, இன்னும் நூறாண்டுகள் கழித்து ஒரு மாணவன் கலைஞரை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்த புத்தகத்தை நாடும் பொழுது புத்தகம் சிறுதாக இருக்கலாம் ஆனால் அதில் இருக்கக்கூடிய கருத்துக்கள் அதிகம்...
கலைஞர் மறைந்த பிறகு அவரை மீண்டும் மீண்டும் படிக்கிறேன், சாகா வரம்பெற்ற கருத்து நிறுவனம் கலைஞர்..எதுவரை ஏற்றத்தாழ்வு இருக்கிறதோ அதுவரை திராவிடம் இருக்கும். எதிர்க்கட்சிகள் பிரச்சனை செய்தால் பெரியார் வழி, பிரச்சனை இல்லை என்றால் அண்ணா வழி.ஆட்சியில் இருந்தால் அண்ணாவழி, ஆட்சியில் இல்லை என்றால் பெரியார் வழி என்று இருந்தவர் கலைஞர்.தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் சமத்துவம் பேசவில்லை, யாதும் ஊரே யாவரும் கேளிர், உலகத்திற்கு அறிவியல் தந்த தமிழ்.பாஜக இன்றைக்கு Indian evidence act - யின் பெயரையே மாற்றிவிட்டார்கள், இந்தியாவை பாரத் என்கிறார்கள், அனைத்தின் பெயரையும் மாற்றிவிட்டார்கள். அவர்களால் மாற்றமுடியாத ஒரு இடம் தமிழ்நாடு, தமிழ், தமிழ்நாடு முதலமைச்சருக்கு பின்னால் இருக்கும் தொண்டர்கள். 8 ஆம் வகுப்பு வரை படித்த ஒரு மனிதர், இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றி, அரசியல் சட்டத்தை காப்பாற்றி, 93 வயது வரை வாழ்ந்தார் என்று சொன்னால் எதிர்காலம் நம்புமா என்று தெரியவில்லை..
இன்று ஆபத்தில் இருக்கக்கூடிய சட்டங்களை காப்பாற்றியவர் கலைஞர், இந்தியாவின் அரசியல் சட்டத்தில் உள்ள இறையாண்மையை காப்பாற்றியவர் கலைஞர்..வங்கிகளை தேசிய மயமாக்கினால் தான் விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் கடன் கொடுக்க முடியும் என்று இந்திரா காந்திக்கு அறிக்கை கொடுத்தார்கள் அந்த அறிக்கையின் அடிப்படையில் வங்கிகளை தேசிய மயமாக்கலாம் என்று இந்திரா காந்தி முடிவெடுத்த நேரத்தில் இந்திரா காந்தி பக்கத்தில் இருந்த மொரார்ஜி தேசாய் நிதித்துறை அமைச்சர் முடியாது என்று மறுத்துவிட்டார்.
நாடாளுமன்றத்தில் சட்டத்தைக் கொண்டு வந்த பொழுது, 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த கலைஞர் நாங்கள் இருக்கிறோம் அரசுடமையாக்குகள், அது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சென்று சேரட்டும் என்று கூறினார். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள இறையாண்மையை காப்பாற்றியவர் கலைஞர், மதசார்பின்மையை காப்பாற்றியவர் கலைஞர், ஜனநாயகத்தை காப்பாற்றியவர் சமதர்மத்தை காப்பாற்றியவர்...
ஆர்ட்டிகல் 370, பொது சிவில் சட்டம், பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமருக்கு கோவில் கட்டுவதுதான் பாஜகவின் கொள்கை. எங்களோடு ஆட்சியில் இருக்கும்பொழுது இந்த மூன்றிலும் கை வைத்தால் தொலைத்து விடுவோம் என்று எழுதி வாங்கியவர் கலைஞர். தமிழை காப்பாற்றினார், தமிழ் உணர்வை காப்பாற்றினார், தமிழுக்கு செம்மொழி உயர்வு கொடுத்தார், தமிழை முன்னுறுத்தி இனத்தைக் காப்பாற்றினார், இனத்தால் தமிழ்நாட்டை காப்பாற்றினார், ஆட்சியால் தமிழ்நாட்டை காப்பாற்றினார், அதற்குப் பிறகு ஒன்றிய அரசுக்கு அரசாங்கத்தில் இருந்து இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றினார்.. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றிய ஒரு மனிதர் 93 வயது வரை இந்த மண்ணில் வாழ்ந்தார் என்றால் இது கடவுளின் அவதாரம் என்று சொல்லக்கூடிய காலமும் வரும். அவ்வளவு ஆற்றலைப் பெற்ற மனிதர் கலைஞர்.கலைஞர் இறந்துவிட்டார், இத்தனை சிலைகளை வைத்துள்ளோம், டெல்லியில் சிலை வைக்கவில்லை, ஆனால் டெல்லியில் எல்லைச்சாமியாக இருந்து கலைஞர் தமிழ்நாட்டை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த எல்லைச்சாமி அங்கு இருக்கும் வரை தமிழனை தமிழ்நாட்டை ஒருவனும் ஒண்ணும் புடுங்கி விட முடியாது" என்று கூறினார்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!