Politics

"முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக கூறவேண்டும் என மிரட்டினர்"- ED மீது புகார் !

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசை விமர்சிப்பவர்கள் மீதான அச்சுறுதல்களும், தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து மக்கள் விரோத நடவடிக்கை அதிகரித்துள்ளது

அதுமட்டுமின்றி தங்களை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளை ஏவி அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்த நிலையில், வழக்கு விசாரணையில் முறைகேடுக்கு கர்நாடக முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக கூறவேண்டும் என அமலாக்கத்துறை வற்புறுத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மகரிஷி வால்மீகி பழங்குடியின வளர்ச்சி கழகத்தில் முறைகேடு செய்ததாக பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரன் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பசனகவுடா தாடால் , சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநர் கல்லேஷ்என்பவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

மேலும் கடந்த ஜூலை 16-ம் தேதி சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநர் கல்லேஷிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளிக்கவேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும், இது குறித்து விசாரணை செய்யவேண்டும் என்றும் அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பீகார், ஆந்திராவுக்கு கூடுதல் நிதி : பட்ஜெட்டில் வெளிப்பட்ட பா.ஜ.கவின் பயம்!