Politics
கடந்த காலத்தை விட மோசமாக இருக்கும் பாஜக ஆட்சி.... - தொடர் முறைகேடு குறித்து செல்வப்பெருந்தகை தாக்கு !
உச்சநீதிமன்ற ஆணையின்படி நாடு முழுவதும் நடந்த நீட் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் அம்பலமாகியுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் எழுதியவர்களின் புள்ளிவிபரங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த தேர்வில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதி அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி நீட் முடிவு வெளியான அறிவிப்பில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியான மதிப்பெண் பட்டியலில் 744 பேர் கூடுதலாக எழுதியிருப்பதாக இருந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு மையங்களில் வெளியான முடிவுகள் ஏற்கனவே வெளியான முடிவுகளோடு ஒத்துப்போகாத வகையில் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள திங்கட்கிழமை விசாரணையில் உச்ச நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமான யு.பி.எஸ்.சி. தலைவர் குஜராத்தை சேர்ந்த மனோஜ் சோனி ராஜினாமா செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இன்னும் ஐந்தாண்டுகள் பதவி காலம் உள்ள நிலையில் விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. யு.பி.எஸ்.சி.யில் நடந்திருக்கும் பல ஊழல்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஏராளமான ஊழல்களும், ராஜினாமாவிற்கும் ஏதாவது தொடர்புள்ளதா எனப்து குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு 8 லட்சம் முதல் 13 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கின்றனர். இதில் வெற்றி பெற்று நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் 2000 முதல் 3000 பேர் மட்டும் தான். அதில் வெற்றிபெற்று பணியமர்த்தப்படுபவர்கள் சுமார் 1000 பேர் மட்டுமே.
தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகளால் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது. அதேபோல மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் யு.பி.எஸ்.சி.யிலும் ஊழல்கள் வெளியாகி அதன் தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற குடிமைப்பணி இடங்களை நிரப்புவதற்கான ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்திலும் பல மோசடிகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகிகொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி ஆட்சியில் நீட் தேர்வினால் மருத்துவத்துறை சீரழிந்து வருகிறது. யு.பி.எஸ்.சி. தேர்வினால் குடிமைப்பணி தேர்வுகளும் ஊழலுக்கு இரையாகியுள்ளன. இதன் மூலம் ஏற்படுகிற விளைவுகளினால் இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது.
சென்னையில் 267 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட 6 பேருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் சமன் அனுப்பியுள்ளனர். இதை தொடர்ந்து பாஜக நிர்வாகியான ப்ரித்வி என்பவர் அண்ணாமலைக்கு மிக மிக நெருக்கமானவர். இவர் இந்த தங்க கடத்தலில் பின்னணியாக இருந்து செயல்பட்டிருக்கிறார். சமீப காலமாக பல்வேறு கிரிமினல் வழக்குகளில் பாஜகவை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது செய்திகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதன் மூலம் தமிழக பாஜக சமூக விரோதிகளின் புகலிடம் என்பது உறுதிப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல பாஜக மகளிர் பிரிவு தலைவராக இருந்த அஞ்சலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய செய்திகளெல்லாம் நான் பாஜக மீது கூறிய குற்றச்சாட்டுகளை உறுதி செய்து வருகிறது.
பொதுவாக கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை விட மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெறுகிற நிகழ்வுகள் கடந்த கால பாஜக ஆட்சியை விட மோசமாக நடைபெற்று வருவதை தான் தேசிய தேர்வு முகமை மற்றும் யு.பி.எஸ்.சி குளறுபடிகள் படம் பிடித்து காட்டுகின்றன.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!