Politics

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் - உச்சநீதிமன்றம் உத்தரவு !

ஒன்றிய பாஜக அரசு தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து ஆளுங்கட்சியினரை மிரட்டி வருகிறது. அந்த வகையில் அமலாக்கத்துறை மூலம் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்து தொல்லை கொடுத்து வந்தது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கூட கிடைக்க விடாமல் அவரை சிறையில் வைத்திருந்தது ஒன்றிய பாசிச பாஜக அரசு. அங்கே அவருக்கு சரியான மருத்துவ உதவி செய்யாமல், உணவு கொடுக்காமல் பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்தது ஒன்றிய பாஜக அரசு. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அவருக்கு கடந்த மே 10-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

அவ்வாறு ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கெஜ்ரிவால் பிரசாரம் செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஜூன் 1-ம் தேதியோடு அவரது ஜாமீன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் திஹார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறை வைக்கப்பட்டார்.

தொடர்ந்து அவரின் ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வழக்கில் இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவருக்கு நிரந்தர ஜாமீன் வழங்குவது குறித்து கீழ் நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அதே போல அமலாக்கத்துறையின் வழக்கின் மீது அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை சட்ட விதிகளின் கீழ் நடைபெற்றதா?இது கவலை அளிப்பதாக உள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். மேலும், அமலாக்கத்துறை சட்டப்பிரிவு-19, 45 ஆகியவை குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ளதால் மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு பரிந்துரை செய்தனர்.

Also Read: குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டத்தை இயற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் - பாஜக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை !