Politics
எமர்ஜென்சி விவகாரம் : “காலாவதியான வித்தைகள் வேலை செய்யுமா?” - நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டல்!
ஒன்றியத்தில் மீண்டும் பாஜக கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சியில் இருக்கும் நிலையில், இந்த முறை எதிர்க்கட்சிகள் தங்கள் குரல்களை ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட, எதிர்க்கட்சியினர் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து கேள்விகளால் மோடி உள்ளிட்ட பாஜகவினரை துளைத்தெடுத்தனர்.
இதனால் பாஜகவினர் திணறி போன நிலையில், சம்மந்தமே இல்லாமல், 1975-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரகடமான 'எமர்ஜென்சி'-யை குறித்து பேச தொடங்கினர். தொடர்ந்து பாஜகவினர் நீட் முறைகேடு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளை திசைத்திருப்புவதற்காக மீண்டும் எமர்ஜென்சி விவகாரத்தை பாஜக கையிலெடுத்துள்ளது.
அதன்படி நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி, இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக அனுசரிக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு தற்போது கண்டனங்களும் விமர்சனங்களும் குவிந்து வருகிறது.
அதன்படி நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில், "இன்று ஜூலை 12- ம் தேதி. ’அரசியலமைப்பு கொல்லப்பட்ட தினம்’ என எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட ஜூன் 25 ஆம் தேதியை அனுசரிக்கும்படி இன்று வந்து சொல்கிறீர்கள். இது போன்ற காலாவதியான வித்தைகள் உண்மையில் வேலை செய்யுமா?" என்று குறிப்பிட்டு மோடியை கிண்டலடித்துள்ளார்.
அதே போல் பிரபல ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய், "1975ம் ஆண்டில் எமர்ஜென்சி கொண்டு வந்ததற்கு இன்று கண்டனம் தெரிவிப்பதிலோ அந்த காலக்கட்டத்தின் தவறுகளை இன்று தொடர்வதிலோ எந்தப் பயனும் இல்லை. எந்த அரசாங்கமாக இருந்தாலும் அடிப்படையில் அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் வேலையை நிறுத்திவிட்டு, உருப்படியாக செயல்பட்டால் பயன் இருக்கும்!" என்று குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை பத்து ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தியதால், பெரும்பான்மையை மக்கள் பறித்திருக்கும் சூழலில், எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாளை ’அரசியல் சாசனம் கொல்லப்பட்ட தினமாக’ கடைபிடிக்கும்படி Non Biological பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பிரதமர் ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் கூட்டம்தான், மநு ஸ்மிருதியை ஏற்கவில்லையென்ற காரணத்தை சொல்லி, நவம்பர் 1949-ல் அரசியல் சாசனத்தை நிராகரித்தவர்கள்." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!