Politics
கொளுத்தப்பட்ட மனுஸ்மிருதி : பாடதிட்டத்தில் இருந்து மனுஸ்மிருதி நீக்கப்படும் என டெல்லி பல்கலை. அறிவிப்பு !
பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கல்வியில் காவி மயத்தை எப்படியாவது புகுத்த வேண்டும் என திட்டத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் அவரை பாடத்திட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை நுழைத்து வருகிறது. தங்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இதை எளிதாக செய்து வருகிறது பா.ஜ.க அரசு.
ஆனால் எதிர்க்கட்சி மாநிலங்களில் இப்படி எளிதாகச் செய்ய முடியவில்லை. இதனால் நேரடியாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிலையங்களில் தங்களது தந்திர வேலைகளைச் செய்து வருகிறது. அந்த வகையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தில் மனுசுமிருதியை இந்த ஆண்டு முதல் சேர்க்க பரிந்துரைக்கப் பட்டிருந்தது.
ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரே மனுஸ்மிருதியை தீ வைத்து கொளுத்திய அதனை பாடத்திட்டத்தில் அனுமதித்த பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் பாணியில் மனுஸ்மிருதியை தீ வைத்து கொளுத்தியும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், மனுஸ்மிருதி பாடதிட்டத்தில் இருந்து நீக்கப்படும் என்று டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங் அறிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொடர் போராட்டம் காரணமாக பாஜக அரசின் இந்த திட்டம் தோல்வியை தழுவியுள்ள நிலையில், இதே போன்று பழமைவாத எண்ணங்களை பாடத்தில் தொடர்ந்து திணித்து வரும் பாஜகவுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது,.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!