Politics

6 மாதத்தில் 557 விவசாயிகள் தற்கொலை! : மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களிடம் பெருவாரியான தொகுதிகளை பறிகொடுத்த NDA கூட்டணி, தங்களது ஆட்சியின் தோல்வியை வெளிப்படையாக ஒப்புகொண்டுள்ளது.

இதனால், விவசாயிகளில் குறைந்த ஆதரவு விலை கோரிக்கை மறுக்கப்பட்டு, விவசாயிகளை போராட விடாமல் தடுக்கிறோம் என்ற பெயரில், வன்முறையை கிளப்பிவிடப்பட்டு விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும், ஒன்றியத்திலும் மட்டுமல்ல. பா.ஜ.க பங்குவகிக்கும் NDA கூட்டணி ஆட்சி செய்கிற மாநிலங்களிலும் தான் என்பது மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்ட தகவல் அறிக்கையின் வழி அம்பலமாகியுள்ளது.

அதன்படி, 2024ஆம் ஆண்டின் முதல் ஆறுமாதத்தில், கடன் சுமை, கடன் பெறுவதில் தாமதம் போன்ற காரணங்களால், சுமார் 557 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது அம்பலமாகியுள்ளது.

குறிப்பாக, அமராவதியில் 170 விவசாயிகளும், யவாத்மல் பகுதியில் 150 விவசாயிகளும், புல்தானா பகுதியில் 111 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இது குறித்து, அமராவதி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி பல்வந்த் வான்கடே, “NDA அரசு உடனடியாக மக்களின் தேவைகளை நிறைவேற்றி, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும்” என வலியுறுத்தியதோடு, “விவசாயிகளின் தற்கொலைகள் என்பது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய செயல். எனவே, அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read: “IIT வேலை வாய்ப்புகளில் வேலையில்லா திண்டாட்டம் - மோடி அரசின் கொள்கையே காரணம்” : ராகுல் காந்தி கண்டனம்!