Politics

உ.பி : அயோத்தியில் அரசே நில மோசடி செய்யும் அவலம்... மேம்பாடு என்ற பெயரில் ஏமாற்றப்படும் ஏழைகள் !

1992-ம் ஆண்டு இந்துத்துவ கும்பல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாக கூறி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அதன்பின்னர் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள் விசாரணையில் இருந்து வந்தது.அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பாபர் மசூதி இருந்த இடத்தில ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது.

அதன் பின்னர் கடந்த மாதம் 22-ம் தேதி முழுமையாக கட்டிமுடிக்கப்படாத ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அயோத்திக்கு ஒன்றிய பாஜக அரசு பல விதங்களிலும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், அயோத்தியில் நில மாபியாக்கள் அதிக அளவில் நிலங்களை வாங்கி விற்று லாபம் சம்பாதிக்கும் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அயோத்தி-பைசாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏழைகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து நிலத்தை விலைக்கு வாங்கி அதன் மூலம் மோசடி நடப்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க அரசு கடந்த 7 ஆண்டுகளாக நில மதிப்பு விகிதத்தை அதிகரிக்காமல் இருக்கும் நிலையில், நகர மேம்பாடு என்ற பெயரில் அவர்களிடமிருந்து குறைவான விலைக்கு நிலம் வாங்கப்படுவதாகவும், இதனால் ஏழைகளுக்கு கிடைக்கவேண்டிய நிலத்தின் உண்மையான மதிப்பும் குறைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Also Read: "சிபிஐ நடவடிக்கை என்பது அரசியல் சாசன விதிமீறல்"- மேற்கு வங்க அரசின் கருத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !