Politics

”ஜனநாயககத்திற்கு விரோதமானது புதிய குற்றவியல் சட்டங்கள்” : ப.சிதம்பரம் கடும் கண்டனம்!

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக, முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றம் பாரதிய சாக்ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போதே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இருந்தும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளையும் மீறி இந்த புதிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா கூட்டணி கட்சிகள் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம், புதிய குற்றவியல் சட்டங்கள் பிற்போக்கானவை என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களில் ஏராளமான பிற்போக்கு விதிகள் உள்ளன. புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள அம்சங்களில் 90% பழைய சட்டங்களின் நகல்களே ஆகும்.

ஜனநாயககத்திற்கு விரோதமான பல விதிகள் இச்சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து சட்ட நிபுணர்கள், நீதிபதிகள் அளித்துள்ள கருத்துக்களை ஒன்றிய அரசு மதிக்கவில்லை. புதிய குற்றவியல் சட்டங்கள் போதிய விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளன." என தெரிவித்துள்ளார்.

Also Read: புதிய குற்றவியல் சட்டம் அமல் : முதல் வழக்கு பதிவு - பாசிச முகத்தை காட்டும் பா.ஜ.க அரசு!