Politics
“அதானிக்கு அந்த கடவுள்தான் கொடுக்க சொன்னாரா?” - முதல் உரையிலேயே பாஜகவை அலறவிட்ட ராகுல் !
18 ஆவது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதிவயேற்றனர். பின்னர் மூன்றாம் நாள் நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லா மீண்டும் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று மக்களவையில் பாஜக ஆட்சியின் அராஜகங்களை எதிர்க்கட்சிகள் தோலுரித்தனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி-யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, இன்று மக்களவையில் தனது முதல் உரையை தொடங்கினார். அப்போது பாஜக ஆட்சியில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள், அக்கிரமங்கள் என அனைத்தையும் கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது, “இந்து மதக் கடவுளரும் மத குருமார்களும் போதிப்பது அகிம்சையைதான். ஆனால் பாஜக இம்சையையும் வெறுப்பையும் பொய்களையும் போதிக்கிறது. இந்துக்களுக்கு எதிராக இருக்கும் மோடி, இந்து அல்ல. பாஜகவோ ஆர்எஸ்எஸ்ஸோ இந்துக்களுக்கானவை அல்ல.
கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாகவும், பயாலாஜிக்கலாக நான் பிறக்கவில்லை என்று கூறும் பிரதமர் மோடி, காந்தி இறந்து விட்டதாகவும் சினிமா மூலமே காந்தியைப் பற்றி மக்களுக்கு தெரியவந்ததாகவும் கூறுகிறார்.
மணிப்பூரை பற்றி இன்று வரை இந்தியப் பிரதமர் பேசவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? இந்தியாவின் மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்று என்பதை பிரதமர் மறந்துவிட்டாரா? பிரதமரும் உள்துறை அமைச்சரும் மணிப்பூர் இருப்பதாகவே நினைக்கவில்லை.
அக்னிவீர் திட்டம் என்பது யூஸ் அண்ட் த்ரோ (use and throw) திட்டம். அக்னிவீர் திட்டம் கைவிடப்பட வேண்டிய திட்டம். இது ராணுவத்தின் திட்டம் அல்ல; மோடியின் திட்டம். அக்னிவீர் திட்டத்தில் ஒரு வீரருக்கு 6 மாதங்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. அக்னிவீர் திட்டத்தில் ஒரு வீரர் உயிரிழந்தால், அவரின் மரணத்தை வீரமரணமாக இந்த அரசு ஏற்காது. மேலும் உயிரிழந்த வீரரின் கும்பத்தினருக்கு உரிய நிதியுதவியை ஒன்றிய அரசு வழங்கவில்லை.
கடவுளுடன் நேரடி தொடர்பில் இருப்பதாக பிரதமர்தான் சொன்னார். நான் சொல்லவில்லை. அவர்தான் தொலைக்காட்சியில் தான் பயாலஜிக்கலாக பிறக்கவில்லை எனக் கூறினார். மும்பையில் அதானிக்கு விமான நிலையம் கொடுக்கச் சொல்லி அந்த கடவுள்தான் சொன்னாரா? வேலையின்மை பற்றி கடவுள் எதுவும் சொல்லவில்லையா?
ராமர் பிறந்த இடமென சொல்லி அயோத்தியில் ராமர் கோவிலை கட்டினார்கள். ஆனால் அயோத்தி பாஜகவுக்கு தேர்தலில் என்ன தீர்ப்பை வழங்கியது? ஸ்ரீராமர் என்ன முடிவை அங்கு பாஜகவுக்கு வழங்கினார்?ஜனாதிபதி உரையில் நீட் தேர்வு பற்றி ஒன்றும் இல்லை. ஒரு நாளேனும் நீட் குறித்து விவாதம் நடத்த வேண்டும். நீட் முறைகேடு, அமைப்பு ரீதியிலான தோல்வி. நீட், தொழில்துறைக்கான தேர்வு அல்ல. தொழிலாக நடத்தப்படும் தேர்வு.
மோடி அவர்களே!, குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இம்முறை, குஜராத் மாநிலத்தில் வெல்லப்போவது இந்தியா கூட்டணி. வீழப்போவது பா.ஜ.க. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மோடி போட்டியிடுவதற்கு முன், இரு முறை அயோத்தியில் கணிப்புகள் நடத்தப்பட்டன. அந்த கணிப்புகளில், மோடியின் தோல்விக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்ததன் காரணமாகவே, வாரணாசியில் போட்டியிட முடிவெடுத்தார் மோடி.
இப்போது மாணவர்கள் நீட் தேர்வை நம்பவில்லை. ஏனெனில் அவர்கள் இந்த தேர்வு, பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டது என நினைக்கிறார்கள். திறமைகளற்ற பணக்காரர்கள் மருத்துவத்துக்குள் வருவதற்கான தேர்வாக அவர்கள் நீட் தேர்வை கருதுகிறார்கள்.
சபாநாயகர் தீர்ப்பு தான் நாடாளுமன்றத்தில் இறுதியானது. சபாநாயகர் அனைவரையும் ஒன்றாக கருத வேண்டும். பதவியேற்பின் போது, எனக்கு கை கொடுக்கும் சபாநாயகர் நிமிர்ந்து நின்று கை கொடுக்கிறார். ஆனால் பிரதமருக்கு கை கொடுக்கும் போது குனிந்து கொள்கிறார்.
எதிர்க்கட்சி தலைவராக ஆன பின்பு, நான் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தலைவர் அல்ல. நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து மற்றும் சிறிய கட்சிகளுக்குமான குரலாக இருக்க விரும்புகின்றேன். எனது தனிப்பட்ட எண்ணங்களை மாற்றி வைத்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் குரலாக எதிரொலிக்கிறேன்.
அதானியம் அம்பானியும் லாபம் பெறுவதற்காகவே விவசாயிகளுக்கு எதிராக மூன்று சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இன்று வரை விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார். ஆனால் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்கிறார்கள். போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு ஏன் அவையில் அஞ்சலி செலுத்த வில்லை?”
அமைச்சர்கள் அனைவருக்கும் அரசியல் சாசன பாதுகாப்பு உண்டு. நீங்கள் தனித்தன்மையுடன் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளும் அரசும், ஒன்றாக சேர்ந்து நாட்டை முன்னிலைக்கு எடுத்து செல்வோம். அரசுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இதையாவது ஏற்றுக் கொள்ளுங்கள்.” என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!