Politics

எதிர்க்கட்சிகளின் ஒலி, ஓங்கத்தொடங்கியது! : 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்!

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, 20 நாட்கள் கழித்து கூடிய, மக்களவையின் முதல் கூட்டத்தொடரிலேயே, பா.ஜ.க.வின் வலுவற்ற நிலை அம்பலமானது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதான எதிர்க்கட்சி தலைவர்கள் பெருமளவில் யாரும் பங்கேற்காதபோது, சுருங்கிய முகத்துடன் மோடி பிரதமராக பதவியேற்றது ஒருபுறம் இருக்க,

எதிர்க்கட்சி தலைவர்கள் அணிவகுப்பில், எம்.பி.யாக பதவியேற்றபோது, மோடியின் முகம் கூடுதலாக சுருங்கியது.

மக்களவையில் 237 பேர், மாநிலங்களவையில் 92 பேர் என, இந்தியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்த ஆதரவால், நாடாளுமன்றத்தின் நிலையே மாற்றம் கண்டுள்ளது.

அதற்கு எடுத்துக்காட்டாகவே, இன்று (24.06.24) நடந்த 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடரும் அமைந்தது.

அண்மையில் நீட், நெட் தேர்வுகளிலும், இதர தேசிய தேர்வுகளிலும் முறைகேடுகள் நடக்க காரணமாய் அமைந்த ஒன்றிய பா.ஜ.க.விற்கு, எதிர்குரல் எழுப்பிய எதிர்க்கட்சியினரின் ஒலி, நாடாளுமன்றத்தையே அதிரவைத்தது.

இதனால், இனி தவறிழைத்தால், நாடாளுமன்றத்தில் தலைகுனிய வேண்டி வரும் என்ற சூழலுக்கும், பா.ஜ.க.வின் அச்சத்திற்கும் வித்திட்டுள்ளது இந்தியா கூட்டணி.

Also Read: சாதிவாரியான கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்? : பேரவையில் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!