Politics

மாட்டிறைச்சி வைத்ததாக கூறி கொடூரமாக தாக்கிய கும்பல் : பாலத்தில் இருந்து தூக்கிவீசி கொலை செய்த கொடூரம் !

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்துத்துவ குண்டர்கள் பலர் பல்வேறு வன்முறை செயல்களிலும், கும்பல் தாக்குதல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதற்கு எதிராகப் புகாரளித்தாலும் காவல்துறை மற்றும் அரசுத் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றம் புரிபவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்துத்துவ கும்பலின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

இந்த நிலையில் மத்தியப் பிரதேசம் மாண்ட்லாவில் மாட்டு இறைச்சியை விற்பனை செய்ததாக கூறி 11 பேரின் வீடுகளை மத்திய பிரதேச பாஜக அரசு இடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மாண்ட்லாவில் உள்ள பைன்வாஹி, நைன்பூர் என்ற பகுதியில் மாட்டு இறைச்சியை விற்பனை செய்ததாக 11 பேரின் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 11 பேரது வீடுகளும் அரசு நிலத்தில் கட்டப்பட்டவை என்று கூறி அவர்களின் வீடுகளை மத்திய பிரதேச அரசு புல்டோசர் வைத்து இடித்து தள்ளியுள்ளது. ஆனால் எந்தவித விசாரணையும் நடத்தாமல் பாஜக அரசு இவ்வாறு நடந்துகொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூரில் பசுக்களை கடத்தி சென்றதாகக் கூறி இரண்டு பேர் கொல்லப்பட்ட செய்தியும் வெளியாகியுள்ளது. பலியான இரண்டு பேரும் கடுமையாக தாக்கப்பட்டு அவர்களின் எலும்புகள் உடைக்கப்பட்ட நிலையில், பாலத்தின் மேலிருந்து தூக்கி வீசி கொல்லப்பட்டுள்ளனர்.

Also Read: NDA கூட்டணி ஆட்சி எவ்வளவு நாள் தாக்கு பிடிக்கும் என்பது ஒரு கேள்வி குறிதான் - கே.பாலகிருஷ்ணன் !