Politics

வாரணாசி தொகுதியில் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட மோடி தயாரா ? - காங். வேட்பாளர் சவால் !

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் களம் கண்டார். தேர்தல் முடிவுகளை அடுத்து அஜய் ராயைவிட 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.

மேலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய மூன்று சுற்றுமுடிவுகளில் மோடி பின்னடைவை சந்தித்தார். அதன் பின்னரே மோடி முன்னிலைக்கு வந்தார். இதுவரை பிரதமராக இருந்த யாரும் இப்படி பின்னடைவைச் சந்திக்காத நிலையில், மோடி தேர்தலில் பின்னடைவை சந்தித்தது பெருசுபொருளானது.

அந்த அளவிற்குக் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் கடும் நெறுக்கடியை மோடிக்குக் கொடுத்துள்ளார். கடந்த இரண்டு தேர்தல்களைக் காட்டிலும் இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கான வாக்குகள் கடுமையாக சரிந்தது தேர்தல் ஆணைய தகவல்கள் மூலம் அம்பலமானது.

இந்த நிலையில், வாரணாசி தொகுதியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிட பிரதமர் மோடி தயாரா? என்று அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் சவால் விடுத்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "வாரணாசியில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பிரதமர் மோடியால் போட்டியிட முடியுமா?

அப்படி மோடி வெற்றி பெற்றால் தான் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகி விடுகிறேன். மோடிக்கான வாக்குகள் பெருமளவுக்கு வாக்குகள் குறைந்ததாலேயே 14 நாட்களுக்குப் பிறகு மோடி தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வந்தார்" என்று கூறியுள்ளார்.

Also Read: மாட்டிறைச்சி வைத்ததாக கூறி கொடூரமாக தாக்கிய கும்பல் : பாலத்தில் இருந்து தூக்கிவீசி கொலை செய்த கொடூரம் !