Politics
நுழைவுத் தேர்வு சிக்கல் அல்ல! : மாற்று கல்வி பெற்றவர்களிடம், ஒரு குறிப்பிட்ட முறையை திணிப்பதுவே சிக்கல்!
வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வு, இந்தியர்களிடம் பொதுவாகவே பெருவாறு காணப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு நடைமுறை.
நில அமைவு, மொழி, பண்பாடு, வரலாறு என ஒவ்வொரு மொழி வழி மாநிலத்திற்கும், தனி சிறப்பு இருக்கிறது.
அதற்கேற்ப, ஒவ்வொரு மாநில அரசும், அம்மாநில மக்களுக்கு தகுந்த கல்வியை வழங்கி வருகிறது.
உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் போற்றப்படும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட போராளிகளின் வாழ்வியல், தமிழ்நாட்டின் அறிஞர்கள் பாவேந்தர் பாரதிதாசன், பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டோரின் படைப்புகள் எவையும், மற்ற மாநிலத்தினரின் கல்வி முறையில் இடம்பெற வாய்ப்பில்லை.
இன்னும் சொல்லப்போனால், ஒரே மாநிலத்தில் இயங்கக்கூடிய பல்கலைக்கழகங்களிலேயே, பாடதிட்டங்கள் மாற்றப்படுகின்றன.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் B.Sc மாணவர்களுக்கும், சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் B.Sc மாணவர்களுக்கும் கிடக்கப்பெறுகிற கல்வியில், பெருமளவு மாற்றங்கள் இல்லாவிடினும், ஓரளவு மாற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இவ்வாறு இருக்கையில், ஒரு குறிப்பிட்ட பாடமுறையின் கீழ் பள்ளிப்படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு, சற்றும் தொடர்பற்ற வகையில், ஒரு பொதுவான நுழைவுத்தேர்வு வைப்பது சரியில்லை என்பது தான், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.
இதனால், இந்தியாவின் எதிர்காலம் என அடையாளப்படுகிற, பல இளைஞர்கள் தங்களின் குறிக்கோளை அடையமுடியாமல், வாழ்வையே முடித்துக்கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
இதனிடையே, தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) உண்டாக்கிய குளறுபடிகள் வேறு, இக்குளறுபடிகளால் நுழைவுத்தேர்வின் மீது இருக்கிற சிக்கல்களும் அதிகரித்துள்ளது.
கேள்வித் தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் என, தேர்வு நடத்தைகளிலேயே பல்வேறு குழப்பங்கள்.
இதனால், தமிழ்நாட்டை கடந்து, தேசிய அளவில் மக்கள் போராட்டம் தலைதூக்கியிருக்கிறது.
எனினும், இதற்கு தக்க பதிலளிக்காமல், தேசியத்தேர்வு முகமை மீது எந்த தவறும் இல்லாதவாறு பதிலளித்துள்ளார், 18ஆவது மக்களவையில் கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற தர்மேந்திர பிரதான்.
இது குறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “ஒன்றியத்தில் பதவியேற்ற ஓரிரு நாட்களில், NEET தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு வீம்புமிக்க வகையில் பதிலளித்துள்ளார் தர்மேந்திர பிரதான். 24 இலட்சம் மாணவர்கள் அழுகைகளுக்கு பதில் கூறாமல், யாரை காப்பாற்ற நினைக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து, நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களின் எதிர்காலம், அவர்கள் விரும்பியவாறு அமையாதிருக்க ஒரு நடைமுறையை, நுழைவுத் தேர்வு என கொண்டு வந்திருப்பதற்கு தேசிய அளவில் கண்டங்கள் வலுக்கத்தொடங்கியுள்ளன.
எனினும், அதற்கு இன்று வரை ஒன்றிய பா.ஜ.க.விடமிருந்து தக்க பதில் வராதது, சர்ச்சையாக மாறியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!