Politics

அக்னிபாத் திட்டம் - தோல்வி, எதிர்க்கட்சிகள் அழுத்தத்தால் பின்வாங்கும் பா.ஜ.க அரசு!

2022 ஆண்டும் ஆண்டு அக்னிபாத் திட்டத்தை கடந்த பா.ஜ.க அரசு அமல்படுத்தியது. இத்திட்டத்தின் படி ஒருவர் ராணுவத்தில் சேர்ந்தால் அவர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்தில் பணியாற்ற இயலாது. மேலும் ஒரு சிலர் மட்டுமே மற்ற மத்திய படைகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தால், ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாவதுடன், ராணுவ வீரர்களின் உறுதித் தண்மையே கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டடுள்ளது.

இதனைத் தொடர்ந்து அக்னிபாத் திட்டத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து வட மாநிலங்கள் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வட மாநிலங்களில் பா.ஜ.க பல்வேறு இடங்களில் தோல்வி அடைந்துள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்தான் மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். நிதிஷ்குமார் உள்ளிட்டவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 70% ராணுவ வீரர்களை ராணுவத்தில் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 17,18 ஆகிய தேதிகளில் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இனி மோடி அரசால் எந்த திட்டத்தையும் தனியாக செயல்படுத்த முடியாது என்பதையே இது காட்டுகிறது.

Also Read: நீட் தேர்வு முறைகேடு : 63 மாணவர்கள் தகுதி நீக்கம்... தேசிய தேர்வு முகமை அறிவிப்பு !