Politics
அண்ணாமலையை விமர்சித்த தமிழிசை - மிரட்டிய அமித்ஷா : பா.ஜ.கவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க படுதோல்வி அடைந்துள்ளது. மேலும் போட்டியிட்ட 21 தொகுதிகளில் 11 தொகுதிகளில் பா.ஜ.க டெபாசிட் இழந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழசை சவுந்திரராஜன்,” தமிழ்நாட்டில் நான் பா.ஜ.க கட்சியின் தலைவராக இருந்தபோது சமூக விரோதிகள் மாதிரி யாராவது தெரிந்தால் அவர்களை ஊக்குவிக்க மாட்டேன். ஆனால் இப்போது கட்சி பதவிகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களை தவிர்த்து கட்சிக்காக உழைக்க கூடியவர்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்” என பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சராக சந்திர பாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் தமிழைசவுந்திரராஜனும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மேடையில் தமிழை சவுந்திராஜன் மூத்த தலைவர்களை சந்தித்தார். அப்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரை அழைத்து கடுமையாக கைநீட்டி மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. மூத்த தலைவர்கள் பலர் அண்ணாமலையை விமர்சித்து வந்தாலும் பா.ஜ.கவின் டெல்லி ஆதரவு உடன் அண்ணாலை ஆட்டம் போட்டு வருவதாக தமிழ்நாட்டு பா.ஜ.கவினரே புலம்பி வருகின்றனர். இதை மெய்பித்து உள்ளது அமித்ஷாவின் மிரட்டல்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!