Politics

மக்களவையில் 102- ஆக உயர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை... தொடரும் சுயேச்சைகளின் ஆதரவு !

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து 99 இடங்களில் வெற்றிபெற்று பிரதான எதிர்க்கட்சியாக மாறியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவராகச் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே மஹாராஷ்டிரா மாநிலத்தின் சங்லி தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற விஷால் பிரகாஷ் பாபு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார்.

Sangli Independent candidate Vishal Prakashbapu

அதனைத் தொடர்ந்து நேற்று பீகார் பூர்ணியா தொகுதியில்சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற பப்பு யாதவ் மீண்டும் காங்கிரசில் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று லடாக் தொகுதியில் சுயேட்சியாக போட்டியிட்டு வென்ற ஹனிபா ஜான் காங்கிரஸில் இணைந்து பணியாற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து விரும்பம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: ஒன்றிய அரசு மீண்டும் ஓரவஞ்சனை: தமிழ்நாட்டிற்கு ரூ.5 ஆயிரம் கோடி - உ.பி-க்கு ரூ.25 ஆயிரம் கோடியா?