Politics

மோடியின் அமைச்சரவையில் இத்தனை வாரிசுகளா... "இதுதான் பாஜக சொல்லும் வாரிசு அரசியலா ? - ராகுல் காந்தி !

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் செய்வதாக தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார். ஆனால் பாஜகவிலேயே ஏராளமான வாரிசுகள் இருக்கும் நிலையில், பாஜகவின் விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் எடுபடாத சூழலே இருந்தது.

இந்த நிலையில், மோடியின் அமைச்சரவை அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் ஏராளமான வாரிசுகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாஜக அமைச்சரவையில் இருக்கும் வாரிசுகள் குறித்து பதிவிட்டு பாஜகவை விமர்சித்துள்ளார்.

அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "மக்கள் பணிக்காக தங்கள் வாழ்க்கையை அர்பணித்தவர்களை விமர்சிப்பதற்காக 'வாரிசு அரசியல்' என்று சொல்லும் பாஜக அமைச்சரவையில்தான் இத்தனை வாரிசுகள்" என்று கூறி, அமைச்சரவையில் இருக்கும் வாரிசுகளின் விவரத்தினை வெளியிட்டுள்ளார்.

மோடியின் அமைச்சரவையில் இருக்கும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் :

  • முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் எச்டி குமாரசாமி,

  • முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பேரன் ஜெயந்த் சவுத்ரி,

  • பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர் மகன் ராம் நாத் தாக்கூர்,

  • ஹரியானா முன்னாள் முதல்வர் ராவ் பிரேந்திர சிங் மகன் ராவ் இந்தர்ஜித் சிங்,

  • பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் பேரன் ரவ்னீத் சிங் பிட்டு,

  • முன்னாள் ஒன்றிய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியா மகன் ஜோதிராதித்ய சிந்தியா,

  • முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான்,

  • முன்னாள் ஒன்றிய அமைச்சர் யெரன் நாயுடு மகன் ராம் மோகன் நாயுடு,

  • முன்னாள் ஒன்றிய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் மகன் பியூஷ் கோயல்,

  • முன்னாள் ஒன்றிய அமைச்சர் தேபேந்திர பிரதான் மகன் தர்மேந்திர பிரதான்,

  • அருணாச்சல் பிரதேசத்தின் முதல் இடைக்கால சபாநாயகர் ரிஞ்சின் காரு மகன் கிரண் ரிஜிஜு,

  • மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் எம்.பி. மற்றும் அமைச்சர் ஜெய்ஸ்ரீ பானர்ஜி மருமகன் ஜேபி நட்டா, உத்தரபிரதேச முன்னாள் எம்.பி. ஜிதேந்திர பிரசாத் மகன் ஜிதின் பிரசாத்,

  • உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் மகாராஜ் ஆனந்த் சிங் மகன் கீர்த்தி வர்தன் சிங்

  • பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் சோனேலால் படேல் மகள் அனுப்ரியா படேல்,

  • முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் காட்சேவின் மருமகள் ரக்‌ஷா காட்ஸே,

  • முன்னாள் எம்.பி ஓம் பிரகாஷ் பஸ்வான் மகன் கமலேஷ் பஸ்வான்,

  • முன்னாள் மேற்கு வங்க அமைச்சர் மஞ்சுள் கிருஷ்ணா தாக்குர் மகன் சாந்தனு தாக்குர்,

  • முன்னாள் மத்தியபிரதேச அமைச்சர் கெளரிசங்கர் சகோதரர் விரேந்திர குமார்,

  • முன்னாள் பிகார் எம்எல்ஏ ரமேஷ் பிரசாத் யாதவ் மனைவி அன்னபூர்ணா தேவி.

Also Read: தரம் தாழ்ந்த விமர்சனங்களை விட்டுவிட்டு நாட்டின் மீது அக்கறை காட்டுங்கள்- மோடியை மறைமுகமாக விமர்சித்த RSS!