Politics

நெருக்கும் கூட்டணி கட்சிகள்... அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரித்த மோடி : 10 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சம் !

பிரதமர் மோடி முதல் முறையாக 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அவருடன் 23 கேபினட் அமைச்சர்களும், 12 இணை அமைச்சர்களும், 10 தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களும் பதவியேற்றனர். ஒட்டுமொத்தமாக 45 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த எண்ணிக்கை மோடி பிரதமான ஆறு மாதங்களுக்கு பிறகு மேலும் அதிகரிக்கப்பட்டது. 21 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்க மொத்த அமைச்சர்கள் எண்ணிக்கை 66ஆக இருந்தது. அதன் பின்னர் சில அமைச்சர்கள் நீக்கப்படுவதும், சேர்க்கப்படுவதுமாக அந்த அமைச்சரவை திகழ்ந்தது.

அதன்பின்னர் மோடி இரண்டாம் முறையாக கடந்த 2019-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்கும் போது, 24 கேபினட் அமைச்சர்களும், 25 இணை அமைச்சர்களும், 9 தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களும் என மொத்தம் 58 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த நிலையில், தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் மோடி மூன்றாம் முறை பதவியேற்கும் போது, 30 கேபினட் அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும், 5 தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களும் என மொத்தம் 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணமாக அதிக அமைச்சர் பதவி கேட்ட கூட்டணி கட்சிகளுக்கே காரணம் என்பது பட்டவர்த்தமாக தெரியவந்துள்ளது. அதிகபட்சம் 81 பேரே அமைச்சர்களாக பதவியேற்க முடியும் என்ற விதி இருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்காக பாஜக இன்னும் எத்தனை அமைச்சரவை இடங்களை விட்டுக்கொடுக்க போகிறது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Also Read: "எனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம்" - கேபினட் அமைச்சர் பதவி கிடைக்காததால் நடிகர் சுரேஷ் கோபி அதிருப்தி !