Politics
“மோடிக்கு முதல் அடியை கொடுத்தது தமிழ்நாடு தான்...” - தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி !
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலம் உள்ளவரை கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி தடையின்றி படிக்கட்டும் குழந்தை தமிழ்நாடு கழகத்தால் முதன்மை என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் 5-வது மண்டல குழு தலைவர் ஸ்ரீ ராமுலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கழக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்கள்.
தொடர்ந்து விழா மேடையில் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது, "நம்முடைய திராவிட மாடல் ஆட்சியிலே காலை சிற்றுண்டி, நான் முதல்வன் திட்டம் கல்லூரி செல்லும்வரை புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என அத்தனையும் கொண்டுவந்தவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மேலும், இந்த உதவிகளை பெற்று மென்மேலும் உங்களுடைய கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும் என்றும் நம் ஆட்சியினுடைய பெருமையை உலகமெங்கும் சென்று பறைசாற்றுகின்ற வகையிலே படித்து முன்னேற வேண்டும் என்று கூறிய அவர் பல்வேறு வேலைகளில் அல்லது பதவிகளில் நீங்கள் பட்டங்களை பெறுவதோடும் உயரங்களை எட்ட வேண்டும்." என்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது, "மாணவர்களுக்கு என்று புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என்று அனைத்து வகைகளிலும் கல்வியை மேம்படுத்துகின்ற திட்டங்களை முதன் முதலில் முன்னெடுத்தவர் நம்முடைய மு.க.ஸ்டாலின்.
புத்தகங்களில் திராவிட இயக்கங்கள் குறித்து தான் பேச வேண்டும், 50 வருடங்களாக திராவிட இயக்கம் ஊன்றி வளர்ந்த இந்த மண்ணினால் தான் இன்று வடமாநிலங்களை விட தமிழ்நாடு கல்வியில் முன்னேறி இருக்கிறது என்றால், அதற்கான விதையை போட்டவர் தந்தை பெரியார்; அதை வளர்த்தவர் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரும்; அதனை புலிப்பாய்ச்சலோடு எடுத்து செல்கிறார் நம்முடைய முதல்வர் அவர்கள்.
இன்று பிரதமர் மோடி அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து வணங்குகிறார். பாஜகவின் பிம்பம் அடியோடு உடைந்து விட்டது, அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த தனி பெருமை மெஜாரிட்டி கிடைக்காமல் மைனாரட்டி மற்ற கூட்டணிக் கட்சிகளோடு ஆட்சி அமைக்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதற்கான முதல் அடியை இந்தியாவில் 40 தொகுதியில் வென்றெடுத்து கொடுத்தது தமிழ்நாடு தான்.
ஜனநாயகத்தை கட்டி காக்கின்ற மக்கள் தீர்ப்புக்கு அதிகார மமதையில் இருப்பவர்கள் தலைவணங்க வேண்டும் என்பதை தமிழ்நாடு இந்தியாவிற்கு உணர்த்தியுள்ளது. நீட் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதற்காகத் தான் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடிக் வருகிறது. நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபதிகளை தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!