Politics

மோடி பேசும் பொய்கள் அளவு ஒருவரால் கற்பனை செய்யக்கூட முடியாது - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம் !

கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் மக்களவையில் புகுந்து புகைக்குண்டுகள் வீசினர். இதன் காரணமாக புதிய நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பினர்.

இதனால் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 150 எம்.பி-க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் வரைவு சட்டங்கள் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்படாமல் நிறைவேற்றப்பட்டது.

அதுமட்டுமின்றி ஏராளமான சட்டங்கள் விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன. இது எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதே அத்திபூத்தாற்போன்ற நிகழ்வாக மாறியது. அப்படியே வந்தாலும் விவாதங்களில் கலந்துகொலாமல் பாஜக நிகழ்ச்சியில் பேசுவதை போல பேசுவதை மோடி வழக்கமாக வைத்திருந்தார்.

தற்போது பாஜகவுக்கு மெஜாரிட்டு கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் தயவால் பிரதமர் மோடி மூன்றாம் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற விவாதங்கள் இல்லாதது ஏக்கமாக உள்ளது என்று கூறினார். இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், பிரதமர் மோடி பேசும் அளவு பொய்களை ஒருவரால் கற்பனை செய்ய கூட முடியாது என CPIM பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பதிவில்,

"- நாடாளுமன்றத்தில் இருந்து 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம்.

- விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றம்.

- வரைவு சட்டங்கள் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்படவே இல்லை.

- எதிர்கட்சிகள் இல்லாத பாரதம் என கொக்கரிப்பு.

ஒரு மனித மனத்தால் இத்தகைய வெட்கக்கேடான பொய்களை கற்பனை செய்ய முடியாது என்று நினைத்தேன்"என்று கூறியுள்ளார்.

Also Read: பாஜக கூட்டணி எம்.பி.களில் பெரும்பான்மை உயர்சாதியினர், இந்தியா கூட்டணியில் OBC சமூகத்தினர் -ஆய்வில் தகவல்!