Politics

பாஜக கூட்டணி எம்.பி.களில் பெரும்பான்மை உயர்சாதியினர், இந்தியா கூட்டணியில் OBC சமூகத்தினர் -ஆய்வில் தகவல்!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

எனினும் பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த கூட்டணியே தற்போது ஆட்சியமைக்கும் சூழலில் அவர்கள் பாஜகவை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள 293 எம்பிக்களில் ஒருவர் கூட இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கிய சமயத்தை சேர்ந்தவர் அல்ல என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வெளியான ஆய்வு தகவலின் அடிப்படையில், பாஜக கூட்டணியில் உள்ள எம்.பி.க்களில் 33.2 சதவீதம் உயர் சாதி என அழைக்கப்படும் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும், 15.7 சதவீதம் இடைநிலை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 26.2 சதவீதம் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.

அதே நேரம் இந்தியா கூடநிலையில் உள்ள 235 எம்.பி.க்களில் இஸ்லாமியர்கள், 7.9 சதவீதமும், சீக்கியர்கள் 5 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 3.5 சதவீதமும் உள்ளனர். இங்கு 30.7 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும், 2.4 சதவீதம் உயர் சாதி என அழைக்கப்படும் சமூகத்தை சேர்ந்தவகளும், 11.9 சதவீதம் இடைநிலை சமூகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

Also Read: "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் 3 ஆண்டுகளில் 1,740 கோவில்களுக்கு குடமுழுக்கு" - அமைச்சர் சேகர்பாபு !