Politics

கூட்டணியின் பங்கு 2 இலிருந்து 12 ஆக உயர்வு! : NDA அரசின் புதிய அமைச்சரவையில் மாற்றம்!

2014ஆம் ஆண்டு, பா.ஜ.க கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஒன்றியத்தில் ஆட்சியமைத்தபின்,

பணியமர்த்திய 26 ஒன்றிய அமைச்சர்களில், 23 பேர் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள்.

ஒன்றிய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என அனைவரையும் சேர்ந்து மொத்தத்தில் இருந்த 71 பேரில், சுமார் 66 பேர் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இந்த எண்ணிக்கை, கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின் கூடியது.

ஒன்றிய அமைச்சர்களின் எண்ணிக்கை 26 இலிருந்து 28 ஆகவும், ஒன்றிய மற்றும் இணை அமைச்சர்களின் எண்ணிக்கை 71 இலிருந்து 72 ஆகவும் உயர்ந்தது மட்டுமல்ல.

அதில் பா.ஜ.க.வின் பங்கும், 66 இலிருந்து 70ஆகவும் உயர்ந்தது. அதாவது மொத்த அமைச்சரவையிலேயே, இருவர் தான் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கும் முதன்மை பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுக்கு பின், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைக்க இருக்கிற பா.ஜ.க, ஒன்றிய அமைச்சரவையில் சுமார் 12 இடங்களை கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கியுள்ளது.

இதுவே, ‘பா.ஜ.க.வின் ஒற்றை அதிகார, ஒற்றை ஆளுமை’ பிரச்சாரத்திற்கு, பெரும் அடியாகவும் மாறியுள்ளது.

இந்திய ஜனநாயகத்தையே, ஒற்றை தலைமைக்குள் கொண்டுவர எண்ணிய பா.ஜ.க.வே, ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில், மற்ற கட்சிகளுக்கு வேறு வழியின்றி வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்து வருகிறது.

குறிப்பாக, கடந்த மோடி ஆட்சியில், புறந்தள்ளப்பட்ட ஆந்திரா, தற்போது அமையவிருக்கும் NDA கூட்டணி அமைச்சரவையில் முக்கிய பங்கு வகிக்கும் இடத்திற்கு வந்துள்ளது.

அதற்கு, NDA கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியின் வலு, காரணமாய் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: பாஜக கூட்டணி எம்.பி.களில் பெரும்பான்மை உயர்சாதியினர், இந்தியா கூட்டணியில் OBC சமூகத்தினர் -ஆய்வில் தகவல்!