Politics
மோடி அமைச்சரவையில் 30 பேர்... ஆனால் கூட்டணியை சேர்ந்தவர்களோ வெறும் 5 பேர் - யார் யார்?
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடித்துள்ளது. .
அதன்படி இன்று புதிய NDA அரசு பதவியேற்பு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் சர்வதேச பிரபலங்களும் கலந்துகொண்டனர். தொடர்ந்து மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் சேர்ந்து 30 அமைச்சர்களும், 36 இணையமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். மேலும் தனி பொறுப்புகளோடு 6 இணையமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.
அதன்படி இன்று ஒன்றிய அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், அமித்ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், சிவராஜ் சௌகான், மனோகர்லால் கட்டார் உள்ளிட்டோர் பதவியேற்றுக்கொண்டனர்.
புதிய NDA அரசில் மோடியுடன் சேர்த்து மொத்தம் 72 அமைச்சர்கள் உள்ளனர். இதில் 30 கேபினட் அமைச்சர்களில் 25 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள்; மீதமிருக்கும் 5 பேர் NDA கூட்டணியில் உள்ளவர்கள் ஆவர்.
5 NDA கூட்டணி அமைச்சர்கள் யார் யார் ?
* HD குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) - HD குமாரசாமி
* நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (JDU) - ராஜிவ் ரஞ்சன் சிங் (என்ற) லல்லன் சிங்
* சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (TDP) - ராம் மோகன் நாயுடு
* லோக் ஜனசக்தி கட்சி (LJP) - சிராக் பஸ்வான்
* ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா (HAM) - ஜிதின் ராம் மாஞ்சி
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!