Politics

பாஜகவின் கொள்கைக்கு எதிரான கூட்டணி கட்சிகள்... பொருந்தா கூட்டணி நீடிக்குமா ? முடிவுக்கு வருமா ?

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

எனினும் பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த கூட்டணியே தற்போது ஆட்சியமைக்கும் சூழல் நிலவுகிறது.

ஆனால், பொருந்தா கூட்டணியான இதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி சாதிவாரி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதனை பாஜக எதிர்த்து வருகிறது.

அதே நேரம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று பாஜகவின் கருத்துக்கு எதிராக வாக்குறுதி கொடுத்துள்ளது. இவ்வாறு பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக உள்ள இரண்டு கட்சிகளும் அந்த கூட்டணியில் தொடருமா என்ற கேள்வி அரசியல் தளத்தில் எழுந்துள்ளது.

Also Read: 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் ! முழு விவரம் ?