Politics

மீண்டும் அதே பாதை! : முரணை வளர்த்து ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க!

கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து 24 ஆண்டுகள் ஒடிசா மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த நவீன் பட்நாயக்கை வரலாறு படைக்கவிடாமல் தடுத்த பா.ஜ.க.வின் முரண் உத்தி.

ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் உடன் இருப்பவர் வி. கே. பாண்டியன். இவர் தமிழர் என்றும், ஒடிசாவை ஆட்சி செய்வதற்கு தமிழருக்கு எங்கிருந்து உரிமை வந்தது என்றுமானது தான் பா.ஜ.க உருவாக்கிய அந்த முரண். இந்த முரண் தான் ஒடிசாவில் நவீன் பட்நாயக் வீழ்ச்சிக்கு ஓரளவு காரணமாகவும் அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு மாநிலமாக சென்று, பிரிவினைகளையும், அதனால் உண்டாகும் முரண்களையும் வளர்த்து, ஆட்சியை கவிழ்க்கும் வேலையை செய்து வரும் பா.ஜ.க,

கடந்த காலங்களில் எவ்வாறு ராஜஸ்தானில் காங்கிரஸையும், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதியையும், மணிப்பூரில் காங்கிரஸையும் கவிழ்த்ததோ, அதே சூழலை தற்போது ஒடிசாவிலும் அரங்கேற்றியிருக்கிறது.

இதனால், ஒடிசாவில் பா.ஜ.க.வின் பக்கம் மக்கள் ஆதரவு பெருகினாலும், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மக்களின் மனநிலை, பா.ஜ.க.விற்கு எதிராக மாற தொடங்கியுள்ளது.

காரணம், ராஜஸ்தானில் அசைக்கமுடியாத ஆற்றலாக இருந்த காங்கிரஸ் மீது பொய் குற்றச்சாட்டுகளை வைத்து, ஆட்சியை பிடித்த பா.ஜ.க,

ஆட்சிக்கட்டிலில் ஏறியது முதல், மக்களை வஞ்சிப்பதையே தான் முக்கிய குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகிறது. 100 நாள் தொழிலாளர்களுக்கு வருவாய் தராமல் இழுத்தடிப்பு செய்ததும், அதில் ஒரு பங்கே. அதன் வெளிப்பாடாகவே, ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடிப்பும், மக்களவையில் பா.ஜ.க.வின் வீழ்ச்சியும் அமைந்தன.

அது போலவே, உத்தரப் பிரதேசத்தில் மதத்தின் பெயரால், பிளவுகளை உண்டாக்கி, கடந்த 7 ஆண்டுகால நடத்தப்பட்டு வரும் பா.ஜ.க கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, தங்களது பெருமளவு ஆதரவை இந்தியா கூட்டணிக்கு பரிசாக அளித்துள்ளனர் மக்கள்.

அந்த ஆதரவில், ராமர் கோவில் அமைந்துள்ள இடத்தின் மக்களும், அமேதி தொகுதி மக்களும், லக்கிம்பூர் கேரி மக்களும் அடங்குவர்.

அவ்வரிசையில், மணிப்பூர் மக்களிடையே நிலவிவந்த ஜனநாயகத்தன்மையை, சுக்குநூறாக்கி, ஆயிரக்கணக்கான மணிப்பூரி மக்களை முகாம்களில் வாழ செய்த பா.ஜ.க.விற்கு, 0 மக்களவை இடங்களை காணிக்கையாக அளித்துள்ளனர் மக்கள்.

இச்சூழலில், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்கள் கடந்து வந்த பாதையில் புதிதாக சிக்கியிருக்கிற

ஒடிசா மீது வருத்தம் தெரிவிக்கும் பதிவுகள் இணையம் முழுக்க, அதிகப்படியாக பகிரப்பட்டு வருகின்றன.

மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின், பிரிவினை பேச்சுகளால், எதிர்மறையான முறையில் வழிநடத்தப்பட்ட ஒடிசா மக்கள், இனி வரும் காலங்களில் எவ்வகையான நெருக்கடிகளை சந்திக்க இருக்கின்றனரோ என்றும் அப்பதிவுகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது! : உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் நன்றி மடல்!