Politics
"மோடிக்கு சட்டங்கள் பொருந்தாதா?" விவேகானந்தர் மண்டபத்தில் விதிகளை மீறிய மோடி - கேள்வி எழுப்பிய காங்கிரஸ்!
பிரதமர் மோடி 7-ம் கட்ட தேர்தல் நடைபெறும் முன்னரே தியானம் மேற்கொள்வதாக கூறி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு கடந்த மே 30 ) மாலை வந்தடைந்தார். அவர் தொடர்ந்து 45 மணி நேரம் (ஜூன் 1) தியானம் செய்வார் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், குளிப்பதற்கும், தூங்குவதற்கு மட்டுமே சிறிது நேரம் ஒதுக்குவார் என்றும், தொடர்ந்து ஏசி அறையில் அவர் விடாமல் தியானத்தில் ஈடுபடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடேன்ற்து பிரதமர் மோடியின் தியானம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது.
சுமார் 28 நொடி உள்ள அந்த வீடியோவில் 9 ஆங்கிளில், கேமராக்கள் அவரை விதவிதமாகி போட்டோஷூட் எடுத்துள்ளது. தியானத்தில் ஈடுபடுபவர் இப்படி எல்லாமா தியானத்தில் ஈடுபடுவார்கள் என அவர்மீது விமர்சனம் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள விதிமுறைகளை மோடி மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவேகானந்தர் மண்டபத்தில் புகைப்படம் எடுக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில், மோடியின் போட்டோஷூட்க்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து சமூகவலைத்தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், "நரேந்திர மோடி சட்டத்தால் ஆளப்படவில்லையா? அல்லது சட்டங்களும் விதிகளும் அவருக்கு பொருந்தாதா? இதற்கு பிரதமர் அலுவலகம் பதில் சொல்லுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!