Politics

"அடுத்த இந்திய பிரதமராக ராகுல் காந்தியைதான் தேர்வு செய்வேன்"- மல்லிகார்ஜுன கார்கே !

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் இன்றோடு முடிவுக்கு வரவுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில், அடுத்த இந்திய பிரதமராக ராகுல் காந்தியைதான் தேர்வு செய்வேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த தேர்தலை இந்தியா கூட்டணியாக இணைந்து போராடுவது என்று முடிவு செய்தோம். அதன்படி போராடினோம். என்னை கேட்டால் எங்கள் கூட்டணி வெற்றிபெற்றபின்னர் பிரதமராக ராகுல் காந்தியைதான் தேர்வு செய்வேன்.

ஏனெனில் அவர் இரண்டு பாரத் ஜோடோ நடைப்பயணத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மேடைகளைப் பகிர்ந்துகொண்டு அனைவரிடம் நெருக்கமானார். அவர் நாட்டின் இளைஞர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இதனால் நான் அவரைத்தான் தேர்வு செய்வேன்.

மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள் பிரதமர் வேட்பாளராக எனது பெயரை முன்மொழிந்தது உண்மைதான். ஆனால், 2004, 2009 போன்ற தேர்தல் முடிவுகளின்படி ஆலோசிக்கப்பட்டது போல, இந்த முறையும் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்த பின்னர்தான் முடிவெடுப்போம்"என்று கூறியுள்ளார்.

Also Read: கடந்த 5 மாதங்களில் ரூ.7 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்த தமிழ்நாடு : உருவான 30 லட்சம் வேலைவாய்ப்புகள் !