Politics

“இந்த முறை அவர்கள் என்னை மேலும் துன்புறுத்துவர், ஆனால்...” - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் !

ஒன்றிய பாஜக அரசு தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து ஆளுங்கட்சியினரை மிரட்டி வருகிறது. அந்த வகையில் அமலாக்கத்துறை மூலம் மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்து தொல்லை கொடுத்து வந்தது.

சுமார் 40 நாட்களுக்கும் மேலாக ஜாமின் கூட கிடைக்க விடாடல் அவரை சிறையில் வைத்திருந்தது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அவருக்கு கடந்த மே 10-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் இந்தியா கூட்டணி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து அவர் தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில் அவரது ஜாமீன் காலக்கெடு நாளையுடன் (ஜூன் 10) நிறைவடையவுள்ள நிலையில், நாளை பிற்பகல் அவர் மீண்டும் திஹார் சிறைக்கு செல்லவுள்ளார். இதனை முன்னிட்டு தற்போது தொண்டர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “ "தேர்தல் பிரச்சாரம் செய்ய உச்ச நீதிமன்றம் 21 நாட்கள் அவகாசம் அளித்தது. நாளை மறுநாள் நான் மீண்டும் திகார் சிறைக்கு செல்வேன். இந்த முறை எவ்வளவு காலம் இவர்கள் என்னை சிறையில் அடைப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால், சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நான் சிறைக்குச் செல்வதில் நான் பெருமை கொள்கிறேன்.

என்னை அவர்கள் பலமுறை உடைக்க பார்த்தார்கள், ஆனால் அதில் அவர்களுக்கு தோல்வியே கிடைத்துள்ளது. என் மருந்துகளை நிறுத்தினார்கள். என்னை துன்புறுத்தினார்கள். இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று இப்போது வரை தெரியவில்லை. 70 கிலோவில் இருந்து 64 கிலோவாக குறைந்துவிட்டேன். தற்போது எனக்கு உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை பகல் 3 மணிக்கு மீண்டும் சிறைக்கு செல்வேன். இந்த முறை அவர்கள் என்னை எப்படி துன்புறுத்துவார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மேலும் என்னை துன்புறுத்துவார்கள்; எனினும் நான் தலைவணங்க மாட்டேன். டெல்லிக்கு நான் ஆற்றும் சேவையை நிறுத்தமாட்டேன்.

டெல்லி மக்களின் 24 மணி நேர இலவச மின்சாரம், மருத்துவம், சிகிச்சை உள்ளிட்டவை தொடரும். மேலும் நான் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், டெல்லி தாய்மார்கள், சகோதரிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.” என்றார்.

Also Read: "நாட்டைக் காப்பாற்ற சிறைக்குச் செல்வதில் எனக்கு பெருமைதான்" - அரவிந்த் கெஜ்ரிவால் !