Politics
கன்னியாகுமரியில் மோடி, திருப்பதியில் அமித்ஷா : எதற்கான நாடகம் இது?
7 கட்டமாக நடந்து வரும் மக்களவை தேர்தல், நாளையுடன் (ஜூன் 1) முடிவடைவதை ஒட்டி, நேற்றே (30.05.24) அதற்கான பிரச்சாரங்களும் முடிவடைந்தன.
அதனால், என்ன செய்வதென்று தெரியாத பா.ஜ.க தலைமைகள் கூட்டம் கூட்டமாக கேமராக்களை தூக்கிக்கொண்டு, தென் மாநிலங்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.
காரணம், தென் இந்திய மாநிலங்களில் முதல் 4 கட்டங்களிலேயே, வாக்குப்பதிவுகள் நிறைவடைந்ததையடுத்து, வட இந்திய மாநிலங்களான, உத்தரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழர்ளையும், தென் இந்திய மக்களையும் எதிரிகளாக்கி பேசினார்கள்.
அதற்கு பல்வேறு அரசியல் எதிர்க்கட்சி தலைவர்களும், வாக்குப்பதிவு முடிவடையும் வரை காத்திருந்துவிட்டு, தற்போது தென் இந்திய மக்கள் மற்றும் தமிழர்கள் மீது, பா.ஜ.க கொண்டிருக்கிற நிலைப்பாட்டை வெளிப்படையாக உமிழ தொடங்கியுள்ளது என தங்களது கண்டனங்களை முன்வைத்தனர்.
எனினும், அப்போதைய நிலையில், அதனை ஒரு பொருட்டாக கூட மதிக்காத மோடியும், அமித்ஷாவும், தற்போது திடீரென தென் மாநில மக்களுடன் இணைந்து இருப்பது போல காட்டிக்கொள்ள, பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, தென் மாநிலங்களில் தரிசனம், தியானம் என கேமாராக்களுடன் வருகை தந்து வருகின்றனர்.
அவ்வகையில், நரேந்திர மோடி கன்னியாகுமரியில், 45 மணிநேர தியானத்தில் ஈடுபடுவதாக கூறி, ஒட்டுமொத்த கன்னியாகுமரியின் தென் பகுதியையே, முடக்கிவிட்டார்.
இதனால், ட்ரோன்கள் இயக்கம், சுற்றுலா பயணிகள், மக்கள் என அனைவருக்கும் தடைவிதிக்கப்பட்டு, மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.
மக்களை வஞ்சித்து வரும் வேலையில், சுற்றி 10 க்கும் குறைவில்லாத கேமராக்களுடன், சூட்டிங் செய்வதில், முழு நாட்டத்துடன் செயல்பட்டு வருகிறார் மோடி.
இதனால், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வியின், “பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தெரிவித்தது, Shooting நடத்த தான், முடிந்தால் கேமராக்கள் இன்றி தியானம் செய்யவும்” என்ற கூற்றும் உண்மையாகியுள்ளது.
இது குறித்து, திரிணாமுல் MP சகாரிகா கோஸ், “நரேந்திர மோடியின் வழியில் சொல்ல வேண்டும் என்றால், கேமராக்காக தியானம், கேமராவால் தியானம், கேமராவுடன் தியானம்” என்றும்,
திரிணாமுல் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே, “இன்று (31.05.24) மாலை 5.07 மணிக்கு, ரீமால் புயல் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக, மோடி தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்போது அவரது தியானம் முடிவுக்கு வந்துவிட்டதா? கேமராக்கள் ரோல் ஆவது நின்றுவிட்டதா?” என்றும், தங்களது X தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இவர்களையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “எனக்கும், மோடிக்கும் இடையே நேரடி விவாதம் நடத்த வேண்டும் என பலரும் அழைப்பு விடுத்தனர். நான் தயார் என்றபோதும், மோடி விவாதத்திற்கு தயாராக இல்லை. இப்போதும் விவாதம் நடத்த வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவர் விவாதத்திற்கு வராமல், தியானத்திற்கு சென்றுவிட்டார்” விமர்சித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தனது பங்கிற்கு, குடும்பத்துடன் திருப்பதிக்கு, கேமராக்களுடன் சென்றுவிட்டார்.
இவ்வாறு, கேமரா விரும்பிகளாக இருக்கும் பா.ஜ.க தலைவர்களை கண்டு, மக்கள் சிரிக்கத்தொடங்கிவிட்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!