Politics

"நாட்டைக் காப்பாற்ற சிறைக்குச் செல்வதில் எனக்கு பெருமைதான்" - அரவிந்த் கெஜ்ரிவால் !

ஒன்றிய பாஜக அரசு தங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது. அந்த வகையில் அமலாக்கத்துறை மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைத்தது.

கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக ஜாமின் கூட கிடைக்க விடாடல் அவரை சிறையில் வைத்திருந்தது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த ஜாமீனை நீட்டிக்க அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் வரும் ஜூன் 2-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எனது நாட்டைக் காப்பாற்ற சிறைக்குச் செல்வதில் எனக்குப் பெருமைதான் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "நான் ஊழல் செய்ததாக பாஜக கூறி வருகிறது. ஆனால் அதற்கான எந்தவொரு ஆதாரமும் அவர்களிடம் இல்லை. ரூ.100 கோடி ஊழல் நடந்ததாகச் சொல்லி 500 இடங்களில் ரெய்டு நடத்தினார்கள். ஆனால், ஒரு பைசாக்கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

பாஜகவினர் என் குரலை ஒடுக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். உலகில் எந்த சக்தியாலும் என்னை உடைக்க முடியாது. எனது நாட்டைக் காப்பாற்ற சிறைக்குச் செல்வதில் எனக்குப் பெருமைதான். ஏனெனில் நான் பகத்சிங்கை பின்பற்றுபவன்"என்று கூறியுள்ளார்.

Also Read: 28 நொடி வீடியோ... 9 ஆங்கிளில் டிசைன் டிசைனா போஸ்.. மோடியின் தியான Photoshoot வீடியோ வைரல்!