Politics
‘சுதந்திரமே, மோடியால் பெற்றது தான்’ என்பார்களோ பா.ஜ.க.வினர்? : நேருவை அடுத்து காந்தியை குறிவைக்கும் மோடி!
மோடியின் பிரச்சார வெறுப்பு மற்றும் பொய் பேச்சுகள் ஒருபுறம் சர்ச்சையானால், சித்தரிக்கப்பட்ட நேர்காணல்களில் இடம்பெறும் மோடியின் பேச்சுகள் மறுபுறம் கேலிக்குள்ளாகி வருகிறது.
அதற்கு ‘என் தாய் இறந்த பின் தான், நான் உயிரியல் பிறப்பல்ல, கடவுளால் அனுப்பப்பட்டவன்; இஸ்லாமியர்கள் குறித்து தரக்குறைவாக பேசினால், என் பொது வாழ்வே அர்த்தமற்று போய்விடும்; எங்கு நான் நேருவை விட உயர்ந்துவிடுவேனோ என அச்சப்படுகிறார்கள்’ போன்ற மோடியின் புது கதைகளே எடுத்துக்காட்டுகளாகவும் அமைந்துள்ளன.
அவ்வரிசையில், தற்போது புதிய புது கதையாக, “1982ஆம் ஆண்டு ‘காந்தி’ திரைப்படம் வெளியாவதற்கு முன், யாருக்கும் மகாத்மா காந்தியை தெரியாது” என தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மோடி பேசியுள்ளது கூடுதல் கிண்டல், கேலிகளுக்குள்ளாகியுள்ளது.
அக்கேலிகளை தொடங்கும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “ஒட்டுமொத்த அரசியல் அறிவியலையும் கற்ற ஒரு மாணவரால் தான் காந்தி படத்தை பார்த்து மகாத்மா காந்தியை பற்றி தெரிந்துகொள்ள முடியும்” என பேசியுள்ளார்.
சி.பி.ஐ.எம் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, “மோடி பிறப்பதற்கு முன்பே, 5 முறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு முன்மொழியப்பட்டவர் காந்தி. அவருக்கு, தன்னை உலக அரங்கில் அடையாளப்படுத்திக்கொள்ள எந்த தேவையும் இல்லை. இது போன்ற நிலையில், காந்தி திரைப்படத்தின் மூலம் தான், காந்தி பற்றி உலகிற்கே தெரிய வந்தது என மோடி கூறுவது அதிர்ச்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, “நல்ல வேளை, மோடி - பிரதமராவதற்கு முன்பே, பல நாடுகளில் காந்தியின் சிலை நிறுவப்பட்டுவிட்டது.இல்லையென்றால் மகாத்மா காந்தியின் சிலைக்கு பதில் பென் கிங்ஸ்லியின் (காந்தி படத்தில் காந்தியாக நடித்த நடிகர்) சிலைகள் தான் நிறுவப்பட்டிருக்கும்” என கிண்டலடித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “உலகின் பல நாடுகள் விடுதலையடைய காந்தி ஒரு முன்னோடியாக திகழ்கிறார். உலகமே, காந்தியின் புகழை பேசுகிறது. ஆனால், நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி, தனது சொந்த நாட்டையும், விடுதலை போராளிகளையும் பற்றி, இவ்வளவு குறைந்த புரிதல் வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இவர்களை தொடர்ந்து, வெறுப்பு பேச்சுகளை அள்ளித்தெளிப்பவரும், பொருளற்று பேசி சிரிக்க வைப்பவரும் ஒருவரே, அது மோடியே என பலரும் தங்களது கேலியான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே, சீக்கிரம் குணமடைய வேண்டும் மோடி! என்ற மீம்களும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Also Read
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!