Politics

இந்தியா கூட்டணி ஒருபுறம் - அரசியலமைப்பை தகர்க்க பார்ப்பவர்கள் மறுபுறம் : ராகுல் காந்தி!

உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜ.க தான் அதிகப்படியான நடப்பு மக்களவை உறுப்பினர்களை பெற்றிருக்கிறது என்றாலும்,

கூட்டம் கூடுவது என்னமோ, இந்தியா கூட்டணிக்கு தான் என்பது நாளுக்கு நாள் உறுதிபெற்று வருகிறது.

அவ்வாறு, இந்தியா கூட்டணி சார்பில், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், சமாஜ்வாதி கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்வதும்,

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், இராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர்களுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்வதும், முழுவீச்சில் நடந்து வருகிறது.

அவ்வகையில், உத்தரப் பிரதேசத்தின் பான்ஸ்கான் பகுதியில், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் உடன் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “இந்திய அரசியலமைப்பை காக்கும் இந்தியா கூட்டணி ஒருபுறம், அரசியலமைப்பை தகர்க்க துடிக்கும் பா.ஜ.க கூட்டணி மறுபக்கம்.

அவ்வாறு பா.ஜ.க அரசியலமைப்பை தகர்க்க நிகழ்த்தி வரும் நடவடிக்கைகளில் சில தான், அக்னிபாத் போன்ற ஒன்றிய பா.ஜ.க அரசின் திட்டங்கள்.

அக்னிபாத் திட்டத்தினால், இராணுவத்தின் வலு குறைந்ததோடு மட்டுமல்லாமல், இளைஞர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனினும், இது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்ததற்கு வருத்தம் தெரிவிக்காமல், ‘கடவுளால் அனுப்பப்பட்டவன் நான், கடவுளின் உந்துதலால் தான் பலதை செய்கிறேன்’ என மழுப்பி வருகிறார் மோடி.

இவ்வனைத்திற்கும் ஒன்றியத்தில் நிகழ இருக்கிற ஆட்சி மாற்றம் வழி விடை கிடைக்கும்” என பேசியுள்ளார்.

இதனால், இந்தியா கூட்டணி மட்டுமல்லாது, தோல்வியை பயத்தில் இருக்கிற பா.ஜ.க.வும் ஜூன் 4-ஐ எதிர்பார்த்து இருக்கிறது.

Also Read: கடவுளால் அனுப்பப்பட்டவரிலிருந்து, கடவுள்களின் அரசராக மாறிய மோடி : பா.ஜ.க தலைவர் நட்டா பேச்சால் சர்ச்சை!