Politics

வாக்கு எண்ணிக்கையை வெளியிடுவதில் சிரமம் இருக்கிறதா? : இருக்கிறது என்றால் யாருக்கு?

ஜனநாயகத்தின் அடிப்படையாக விளங்கும் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டுவதற்கே, நீதிமன்றம் தான் ஒரே வழி என்ற சூழலை, உருவாக்கியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

ஒன்றிய பா.ஜ.க அரசென்றால், அதில் பா.ஜ.க.வினர் மட்டுமல்ல, ஒன்றிய அரசின் விசாரணைக்குழுக்களும், ஜனநாயகத்தனமையை நிறுவும் இடத்தில் இருக்கிற தேர்தல் ஆணையமும் கூட அடக்கம் தான் என்ற மனநிலையை மக்கள் எட்டத்தொடங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாகவே, தேர்தல் ஆணையத்தின் பதில்களும் அமையப்பெற்றுள்ளன.

‘வாக்கு இயந்திரத்தை மூடுவதற்கான பொத்தானை இறுதியாக அழுத்தும்போது, பதிவான வாக்குகள் எண்ணிக்கை Control Unit திரையில் தெரியும். அந்த எண்ணிக்கையை உடனே Form 17C-ல் பதிவு செய்ய வேண்டும்’ என்கிற விதியை வாக்குச்சாவடியின் தேர்தல் அதிகாரிக்கான கையேட்டில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருப்பிடப்பட்டிருக்கும் போதும்,

வாக்குப்பதிவு விவரங்களை தொகுத்து வெளியிட நேரம் பிடிப்பதாக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததுள்ளது தான் அந்த பதில்.

தேர்தல் அதிகாரிகளுக்கான கையேட்டில் இந்த உண்மை அம்பலமான பின்பு, தகவல்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதற்கு,

தற்போது, “பொது வெளியில் வாக்கு எண்ணிக்கை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமல்ல” என மற்றொரு சாக்கு கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் இயல்பாக செய்யக்கூடிய பணிகளையே, தயங்கி தயங்கி செய்து வருவது ஏன்? என்ற வாதத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகிற நிலையில்,

இவ்வளவு சிரமம் உண்டாவது, மக்கள் உண்மையை அறிந்துவிடக்கூடாது என்பதற்காகவா? அல்லது மேயர் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசடி வரலாறு வருங்காலத்தில் தடைபட்டுவிடும் என்பதற்காகவா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: 13 நாட்கள் கடந்துவிட்டன : மெளனம் கலைப்பாரா மோடி?