Politics
மோடி என்கிற போலி பிம்பத்தை உருவாக்கும் பா.ஜ.க.வினர்! : உருவாவது உண்மை தானா?
பா.ஜ.க என்கிற பெயர் உச்சரிக்கப்படுவதை விட, மோடி என்கிற பெயர் தான் நாட்டில் அதிக முறை உச்சரிக்கப்பட்டிருக்கும்.
ஒரு அரசியல் கட்சி தலைவர் என்கிற அடையாளத்தைக் கடந்து, இந்தியா விடுதலை பெற்றதற்கே மோடி தான் காரணம் என்கிற அளவிற்கு மோடியின் பின்பற்றாளர்கள் பேச்சுகள் அமைந்துள்ளன.
ஆனால், அவர் உண்மையில் அது போன்ற போற்றுதல்களுக்கு உகந்தவரா என்ற கேள்வியும் தொடர்ந்து முன்மொழியப்பட்டு வருகிறது.
காரணம், பிரதமராக இருக்கும் மோடியின் அதிகபட்ச சாதனைகளாக பார்க்கப்படுவது, ஆர்.எஸ்.எஸ்-இல் பணியாற்றியது, அதன் வழி பா.ஜ.க.வில் இணைந்தது.
பின்பு, சில ஆண்டுகளில் குஜராத் பா.ஜ.க.வின் தலைமை பொறுப்புகளை அடைந்து, 2001-இல் குஜராத் முதல்வரானது. 13 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமரானது. தற்போது வெறுப்பு பேச்சுகளை அள்ளித்தெளிப்பது ஆகியவை தான்.
13 ஆண்டுகள் முதல்வர், 10 ஆண்டுகள் பிரதமர் என கடந்த 23 ஆண்டுகள் மிகப்பெரிய பொறுப்பு வகித்து வரும் மோடி, பல நேரங்களில் வாய் பேசாத பொம்மையாகவே இருந்து வருகிறார்.
தொண்டர்கள் தன்னை, கடவுள் என்றாலும் சரி, ‘தேசத் தந்தை’ போன்ற மற்றவர்கள் சிறப்புப் பெயர்களை தனக்கு சூட்டினாலும் சரி, அதற்கு அவர் என்றும் மறுப்பு தெரிவித்ததில்லை.
அதே போல, நாட்டில் எத்தனை சிக்கல்கள் எழுந்தாலும் கூட அவர் வாய் திறப்பதல்ல. ஆனால், அதற்கு மாற்றாக இல்லாத சிக்கல்களை உருவாக்கி, அது குறித்து 10 பக்கங்களுக்கு பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அவ்வப்போது கண்களில் கிளிசரின் போடாத கண்ணீர் சிந்தும் நிகழ்வுகளும் அரங்கேறுவது உண்டு.
இந்த பிம்பம் எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து கட்டவிழ்க்கப்பட்டாலும், அது குறித்து மனம் தளராமல் தங்களது நாடகத்தை விடாது செய்து வருகின்றார் மோடி.
ஒருவர் பல சிக்கல்களில் பேசாமல் இருப்பதனால், அவர் மக்களுக்காக தான் சிந்திக்கிறார் என்ற பிம்பம் விழ ஏதுவாக இருப்பதை, கடந்த 10 ஆண்டுகளாக, தனக்கு சாதகமாக்கி வருகிறார் மோடி.
அதனால், மக்களை திசை திருப்ப முன்னெடுக்கப்படும் முயற்சிகளும் ஏராளம். அம்முயற்சிகளில் ஒன்றாகவே, பா.ஜ.க தேசிய செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, 2017 ஆம் ஆண்டு காந்தியடிகளை போற்றக்கூடிய ‘தேசத்தந்தை’ என்ற பெயரை, மோடிக்கு சூட்டிய நிகழ்வும், தற்போது ‘கடவுள் ஜெகநாதரே மோடியின் பக்தர்தான்’ என்ற பிதற்றலும் அமைந்துள்ளது.
இது போன்ற பல கருத்துகள், பல நேரங்களில், பா.ஜ.க நிர்வாகிகள் அல்லது பா.ஜ.க.வின் மறைமுக ஆதரவாளர்களால் முன்மொழியப்பட்டு வருகிறது.
எனினும், இது போன்ற மாயைகளுக்கு மக்கள் மசியப்போவதில்லை என்பது, அண்மையில் கூடிவரும் இந்தியா கூட்டணியின் ஆதரவு வழி வெளிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!