Politics
ரேபரேலி தொகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட வாக்குப்பதிவு : ராகுல் காந்தி போட்டியிடுவது தான் காரணமா?
உத்தரப் பிரதேசம் என்றால் பா.ஜ.க என்கிற எண்ணம், மறைய தொடங்கியதையடுத்து, அதிகரிக்கும் மோசடிகள்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (20.05.24) காலை 7 மணிக்கு தொடங்கியது முதல்,
உத்தரப் பிரதேசத்தின் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்படுவதாக, வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில், சுமார் 4 மணிநேரத்திற்கும் மேல் வாக்களிக்க இயலாமல் மக்கள் வெயிலில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால், இது ஒன்றிய பா.ஜ.க.வின் அச்சத்தின் வெளிப்பாடா என்ற கேள்விகளும் வலுக்கத்தொடங்கியுள்ளது.
4 மணிநேர காத்திருப்பிற்கு பிறகு, ரேபரேலி தொகுதியில், 43 பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றிவிட்டதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தொகுதியில் அமைந்துள்ள 312ஆவது வாக்குச்சாவடியில் பா.ஜ.க.வினர் கும்பலாக சென்று, காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவரை வெளியேற்றியதாகவும் புகார் எழுந்தது.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் பகுதியில், சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க சென்றபோது, தனக்கு உதவுவதாக கூறி, பா.ஜ.க சின்னத்தில் வாக்களித்ததாக பெண் வாக்காளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல வாக்குச்சாவடிகளில், இது போன்ற மோசடிகளில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறதாக, புகார்கள் குவிந்து வருகின்றன.
கடந்த 4ஆம் கட்ட தேர்தலில் கூட, பா.ஜ.க பிரமுகரின் 16 வயது சிறுவன் 8 முறை பா.ஜ.க.விற்கு வாக்களித்த சம்பவம் உறுதியாகி, கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பாஜக முன்னாள் தோல்வி இருப்பதால், அவர்கள் அரசு இயந்திரத்திற்கு அழுத்தம் கொடுத்து ஜனநாயகத்தை கொள்ளையடிக்க நினைக்கின்றனர். தேர்தல் பணிகளில் ஈடுபடும் எத்தவொரு அதிகாரியும் அரசியலமைப்புச் சட்டபிரமாணத்தை அவமதித்தால், இந்தியா கூட்டணி அரசு அமைந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
தங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, பா.ஜ.க.வினரால் தொடரப்படும் இது போன்ற மோசடிகள், தேசிய அளவில் வலுவடைந்து வருவதையடுத்து, அதற்கான கண்டனங்களும் வலுவடைந்து வருகின்றன.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!