Politics

"பாஜக அலுவலகத்தை முற்றுகைட்டு போராட்டம்" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு !

ஒன்றிய பாஜக அரசு தங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது. அந்த வகையில் அமலாக்கத்துறை மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைத்தது.

கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக ஜாமின் கூட கிடைக்க விடாடல் அவரை சிறையில் வைத்திருந்தது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மீ கட்சியையும் அமலாக்கதுறை இணைத்து. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை அழிக்க முயலும் பாஜகவை கண்டிக்கும் வகையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாளை மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் எம்பி, எம்எல்ஏக்களுடன் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம்.

ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கும் பிரதமர், முடிந்தால் எங்களது கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்துக் கொள்ளட்டும். ஏற்கனவே எங்கள் கட்சித் தலைவர்களைக் கைது செய்த பிரதமர் மோடி, தற்போது எனது உதவியாளரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். கட்சியைச் சேர்ந்த அனைவரையும் சிறையில் அடைக்க முயல்கிறார்” என்று கூறியுள்ளார்.

Also Read: "பிரதமர் பதவிக்கு தான் தகுதியற்றவர் என்பதை மோடி உணர்ந்துள்ளார்" - பிரியங்கா காந்தி விமர்சனம் !