Politics

ஆட்சிக்கு வந்ததும் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும்- ராகுல் காந்தி வாக்குறுதி

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரே அணியாக தேர்தலை சந்திக்கின்றன. இதனால் பாஜக கடும் அச்சத்தில் உள்ளது. மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரை ராகுல் காந்தி கேரளத்தின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரே பரேலி என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் 10 கிலோஉணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் 10 கிலோஉணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான், உணவுப் பாதுகாப்புச் சட்டம் மூலம் உணவு உரிமைக்குசட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது.

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தகுதியுள்ள மகளிருக்கு மாதந்தோறும் 8 ஆயிரத்து 500 ரூபாய், சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட ஏற்கனவே அளித்த வாக்- குறுதிகளும் நிறைவேற்றப் படும் இந்தியா கூட்டணி அரசு கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்கி இந்தியர்களின்அரசை நடத்தும்" என்றும் கூறியுள்ளார்.

Also Read: “இரண்டு கதாபாத்திரமும் ஒன்றுதான்” : மோடியை மறைமுகமாக விமர்சித்த சுப்ரியா ஸ்ரீனேட் !