Politics
அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் தலையிட முடியாது : உச்ச நீதிமன்றம் உறுதி !
ஒன்றிய பாஜக அரசு தங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது. அந்த வகையில் அமலாக்கத்துறை மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைத்தது.
கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக ஜாமின் கூட கிடைக்க விடாடல் அவரை சிறையில் வைத்திருந்தது ஒன்றிய பாசிச பாஜக அரசு. இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
அந்த வழக்கின் தொடர் விசாரணை இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிசிட்டர் துஷார் மேத்தா, தேர்தல் பிரச்சாரங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு பொதுமக்கள் வாக்களிக்கவில்லை என்றால் மீண்டும் ஜூன் இரண்டாம் தேதி சிறைக்கு செல்ல நேரிடும் என்று பேசி வருகிறார். இதனை அனுமதிக்க கூடாது என்று வாதிட்டர்.
அப்போது நீதிபதிகள், தீர்ப்பை விமர்சிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதற்குள் நீதிமன்றம் செல்லவில்லை. நீதிமன்றம் யாருக்கும் சலுகை காண்பிக்கவில்லை, விதிவிலக்கு அளிக்கவில்லை. சட்டப்படியான உத்தரவுகள் தான் பிறப்பிக்கப் பட்டுள்ளன என கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். அதற்கு மேல் எதும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு விசாரணையின் போது ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதாக நீதிபதிகள் மீண்டும் சுட்டிக்காட்டினர். தொடர்ந்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!