Politics
பாலியல் வழக்கு : தொடர்ந்து எழும் புகார்... கர்நாடக முன்னாள் அமைச்சர் HD ரேவண்ணா அதிரடி கைது !
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனான HD ரேவண்ணா, ஹோலேநரசிப்பூர் தொகுதியில் கடந்த மதச்சார்பற்ற ஜனதா தள (JDS) கட்சியின், 2004 முதல் தற்போது வரை (2024) தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். 2004-ம் ஆண்டு அமைச்சராகவும் இருந்தார். இந்த சூழலில் தற்போது இவர் பாலியல் புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதி வேட்பாளரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JDS) எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ இணையத்தில் வைரலாகி எதிர்க்கட்சிகள் மத்தியில் கண்டனங்களை எழுப்பி வருகிறது. ப்ரஜ்வல் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்களின் 3000 ஆபாச வீடியோவை பதிவு செய்துள்ளார்.
ஹாசன் தொகுதியின் வாக்குப்பதிவு நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக இந்த வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்கு அம்மாநில முதல்வர் உத்தரவிட்டார். இதனிடையே அவர் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, ஜெர்மனிக்கு தப்பி சென்றுள்ளார். 3000 ஆபாச வீடியோ சர்ச்சையானது நாட்டையே உலுக்கிய நிலையில், அக்கட்சியின் கூட்டணியான பாஜக வேட்பாளரும் பிரதமருமான மோடி இன்று வரை வாய் திறக்கவில்லை.
இந்த விவகாரத்தை தொடர்ந்து ப்ரிஜ்வலின் தந்தை HD ரேவண்ணா மீது அவரது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் பாலியல் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தன்னை பாலியல் ரீதியாக ரேவண்ணா தொந்தரவு செய்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2019-ல் வேலைக்கு சேர்ந்த 4-வது மாதத்தில் இருந்து ரேவண்ணாவின் மனைவி எப்போதெல்லாம் வீட்டில் இல்லையோ, அப்போதெல்லாம் தன்னை அடிக்கடி அவருடைய வீட்டுக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பார் என்றும், தனது ஆடைகள் மேல் கைவைத்து அத்துமீறுவார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து என்று இதுவரை 3 பெண்கள் ரேவண்ணா மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படியில் ரேவண்ணா மீது 354a, 354d, 506 மற்றும் 509 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ரேவண்ணா முன்ஜாமீன் கோரி நேற்றைய முன்தினம் (02.05) பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இன்று ரேவண்ணாவை அதிரடியாக கைது செய்துள்ளது சிறப்பு புலனாய்வு குழு. முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டில் இருந்து HD ரேவண்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். இதனிடையே ரேவண்ணா மீது பாலியல் புகார் அளித்த பணிப்பெணை ரேவண்ணா ஆதரவாளர்கள் கடத்தி சென்றதாக அவரது மகன் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, ரேவண்ணாவின் ஆதரவாளர் வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த பணிப்பெண்ணை பத்திரமாக மீட்டனர். ரேவண்ணா மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்செயல்களின் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வெளிநாடு தப்பிச்சென்றுள்ள பிரஜ்வலை இந்தியா அழைத்து வர போலீசார் தீவிர ஏற்பாடு செய்து வருகின்றனர். அவருக்கு எதிராக 2 லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!