Politics
மதப்பிளவை வளர்க்கும் மோடியின் வெறுப்பு பேச்சு! : 5 நாட்களில் 17 பொய்கள்!
ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 25 வரை, மோடி பேசிய பொய்களும், வெறுப்பு பேச்சுகளும் :
ஏப்ரல் 21 - பான்ஸ்வாரா, ராஜஸ்தான்.
மோடி : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்து பெண்களின் தங்க நகைகள், தாலிகள் உள்ளிட்ட தனியார் உடைமைகள் கைப்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், தனியார் உடைகள் கைப்பற்றுவது குறித்தோ, அல்லது பெண்களின் தாலிகள், தங்க நகைகள் குறித்தோ எவையும் இடம்பெறவில்லை.
மோடி : காங்கிரஸின் கடந்த கால ஆட்சியில், இந்தியாவில் முன்னுரிமை பெற்றவர்கள் - இஸ்லாமியர்கள் என தெரிவிக்கப்பட்டது.
உண்மை : 2009-ல் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், “இந்தியாவில் சிக்கல்களை சந்தித்து வரும் சமூகத்தினரான பட்டியலினத்தினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள், குழந்தைகள் என அவரும் முன்னேற்றமடைய வேண்டும்” என பேசினார். ஒரு தனிப்பட்ட மதத்தை குறிப்பிட்டு கூறவில்லை.
மோடி : காங்கிரஸ் ஆட்சியில் ஊடுருவி வந்தவர்களுக்கு (இஸ்லாமியர்கள்), அதிக குழந்தைகள் உடையவர்களுக்கு (இஸ்லாமியர்கள்) மக்கள் சொத்துகள் தாரைவார்க்கப்பட்டன.
உண்மை : இஸ்லாமியர்கள் ஊடுருவி வந்தவர்கள் என்பதற்கும், அதிக குழந்தைகள் உடையவர்கள் என்பதற்கும் எவ்வித தகுந்த ஆதாரமும் இல்லை.
ஏப்ரல் 22 - அலிகர், உத்தரப் பிரதேசம்.
மோடி : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வருவாய், உடைமை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தனியார் உடைமைகள் கையகப்படுத்தப்படும்.
உண்மை : “பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பொது வகுப்பை சேர்ந்த ஏழைகள், சிறுபான்மையினர் என அனைவருக்கும் தக்க உரிமை வழங்கப்படும்” : ராகுல் காந்தி. தனியார் உடைமைகள் கையகப்படுத்தப்படும் என எந்த முன்மொழிவும் தெரிவிக்கப்படவில்லை.
மோடி : வாரிசு சொத்துகள், பெண்களின் உடைமைகளில் சில காங்கிரஸால் பறிக்கப்படும்.
உண்மை : 1961-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட, சமவுரிமை சட்டமான, நில உச்சவரம்பு சட்டத்தின் வழி, மிகவும் பின்தங்கியவர்களுக்கு நிலம் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் ஏற்கனவே, இந்தியாவின் 21 மாநிலங்களில் அமலில் இருக்கிறது.
ஏப்ரல் 23 - டோங்க்-சவாய் மாதோபூர், ராஜஸ்தான்.
மோடி : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தேவைக்கு அதிகமான சொத்துகள் கையகப்படுத்தப்படும். அதாவது, இரண்டு வீடு உங்களிடம் இருந்தால், அதில் ஒரு வீட்டை அரசு எடுத்துக்கொள்ளும்.
உண்மை : காங்கிரஸ் அறிக்கையிலும், காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுகளிலும் கையகப்படுத்துவது தொடர்பான எவ்வித முன்மொழிவுகளும் இடம்பெறவில்லை.
மோடி : இந்தியாவின் சொத்துகளுக்கு முதன்மை உரிமை பெற்றவர்கள் இஸ்லாமியர்கள் என மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
உண்மை : இந்தியாவில் முதன்மை பெற்றவர்களாக மன்மோகன் சிங் அடையாளப்படுத்தியது, பொருளியலில் பின் தங்கியிருக்கும், பட்டியலினத்தினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள், குழந்தைகள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோர் தான் என்ற தரவு உள்ளது.
ஏப்ரல் 24 - சாகர், மத்தியப் பிரதேசம்.
மோடி : கர்நாடக மாநிலத்தில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (OBC) இடஒதுக்கீட்டில், இஸ்லாமியர்களை இணைத்து, OBC-களுக்கான வேலைவாய்ப்பை பறித்துள்ளது காங்கிரஸ்.
உண்மை : இந்தியாவின் 14 மாநிலங்களில், இஸ்லாமியர்கள் OBC இடஒதுக்கீடு பெற்று வருகின்றனர். அதில் மோடி ஆட்சி செய்த குஜராத்தும் ஒன்று. அதுமட்டுமல்லாது, கர்நாடகத்தில் இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்தது, பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற முன்னாள் பிரதமர் தேவ கவுடா தான்.
ஏப்ரல் 24 - சர்குஜா, சத்தீஸ்கர்.
மோடி : மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடுகளை முன்மொழிந்து, SC, ST, OBC இடஒதுக்கீட்டிற்கு அச்சுறுத்தல் விடுகிறது காங்கிரஸ்.
உண்மை : பொருளாதாரம் மற்றும் சமூக அளவில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க செய்ய மட்டுமே, காங்கிரஸ் திட்டமிட்டது.
மோடி : கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின், காங்கிரஸ் முன்மொழிவுகள் புறக்கணிக்கப்பட்டு தலித் மற்றும் பழங்குடியினர் உரிமை மீட்கப்பட்டது.
உண்மை : கர்நாடகத்தில் ஆட்சியமைத்த பா.ஜ.க, இஸ்லாமியர்களுக்கு வழங்கி வந்த 4% இடஒதுக்கீட்டை நீக்கியதே தவிர, அதனை, தலித் மற்றும் பழங்குடியினர்களுக்காக பயன்படுத்தவில்லை.
மோடி : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பரம்பரை சொத்துக்கான வரி (Inheritance Tax) அமலுக்கு வரும்.
உண்மை : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், பரம்பரை சொத்துக்கான வரி குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை.
ஏப்ரல் 24 - பேதுல், மத்தியப் பிரதேசம்.
மோடி : காங்கிரஸ் தனக்கான வாக்கு வங்கியை பெரிதாக்க, நடப்பு இடஒதுக்கீடு முறையை தகர்த்து, மதத்தின் பெயரில் புதிய இடஒதுக்கீடு முறையை கொண்டு வரும்.
உண்மை : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்தும், தனியார் சொத்து பகிர்வு குறித்தும் எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.
மோடி : கடந்த காலங்களில் பரம்பரை சொத்துக்கான வரியை அமலுக்கு கொண்டு வர, காங்கிரஸ் பல வேலைகளில் ஈடுபட்டது.
உண்மை : 2011-ல் பரம்பரை சொத்து குறித்து முன்மொழியப்பட்டாலும், அதனை காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கவில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு கூட, அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பரம்பரை சொத்துக்கான வரி குறித்து முன்மொழிந்தார்.
ஏப்ரல் 25 - ஆக்ரா, உத்தரப் பிரதேசம்.
மோடி : மதத்தின் பெயரால், 27% OBC இட ஒதுக்கீட்டிற்கு தடையிட திட்டமிட்டுள்ளது காங்கிரஸ்.
உண்மை : இது போன்ற எந்த கருத்தும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை. காங்கிரஸ் தலைவர்களும் எவ்வித நம்பிக்கையும் விதைக்கவில்லை.
மோடி : 55% மக்களின் பரம்பரை சொத்துகளை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது காங்கிரஸ்.
உண்மை : காங்கிரஸ் தலைமை, தேர்தல் அறிக்கை என எவற்றிலும், இது குறித்த எவ்வித தகவலும் இல்லை.
ஏப்ரல் 25 - முரைனா, மத்தியப் பிரதேசம்.
மோடி : இந்திரா காந்தி இறந்த பின், அவரது சொத்துகளை பெற, பரம்பரை சொத்து வரியை (Inheritance tax) நீக்கினார் ராஜீவ் காந்தி.
உண்மை : 1985ஆம் ஆண்டு வி.பி. சிங், நிதியமைச்சராக இருந்த போது, நீக்கப்பட்டது தான் இவ்வரி. இந்த சட்டம் 16 மார்ச் 1985-க்கு பிறகு இறந்தவர்களுக்கு தான் செல்லுபடியாகும். ஆனால், இந்திரா காந்தி கொல்லப்பட்டது, அக்டோபர் 31, 1984.
ஏப்ரல் 25 - ஆன்லா, உத்தரப் பிரதேசம்.
மோடி : காங்கிரஸ் கட்சி, பொருளாதார கணக்கெடுப்பு மட்டுமல்ல, அனைத்து நிறுவனங்களிலும் கணக்கெடுப்பு நடத்த இருக்கிறது. அதில், ஒரு பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் இருவர் வேலையில் இருந்தால், அதில் ஒருவரின் வேலையை பறிக்க திட்டமிட்டுள்ளது.
உண்மை : இது போன்ற எந்த நடவடிக்கையும், காங்கிரஸ் தெரிவிக்கவில்லை. சமூக - பொருளாதார கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, நாட்டின் ஜனநாயகத்தன்மை பாதுகாக்கப்படும் என்று மட்டும் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Scroll
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!