Politics

பாஜகவில் சேர்ந்த காங். மூத்த தலைவர் : பொதுமக்கள் எதிர்ப்பால் பிரச்சார கூட்டத்தை கூட நடத்த முடியாத சோகம் !

பாஜக ஆளாத மாநிலங்களை குறிவைத்து ஒன்றிய பாஜக அரசு தங்கள் அதிகாரத்தை வரையறையின்றி கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ என அரசின் அமைப்புகளை அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது. தொடர்ந்து இதற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தனது அதிகாரத்தை பயன்படுத்தி பலரது வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டதோடு, அவர்களை மிரட்டி பாஜகவில் இணைத்துள்ளது. இவ்வாறு மற்ற அரசியல் கட்சிகளில் இருக்கும் முக்கிய நபர்களை தேர்ந்தெடுத்து, பாஜக மிரட்டி தனது பக்கம் இழுத்து வருகிறது. அப்படி அடிபணியாத ஆட்களை கைது செய்து தொல்லைகொடுத்து வருகிறது.

அதே போல் ஊழல்வாதி, கொலை குற்றவாளி, பாலியல் வன்கொடுமை குற்றவாளி, பயங்கரவாதி என யார் மீதெல்லாம் குற்றங்கள் சுமத்த படுகிறதோ, அவர்கள் எல்லாம் பாஜகவில் இணைந்தால் அது நீக்கப்பட்டு விடுகிறது.இவ்வாறாக யாரெல்லாம் பாஜகவில் இணைந்தார்களோ, அவர்கள் எல்லாம் தற்போது புனிதராகி விடுகிறார்கள். அவர்கள் மீதுள்ள வழக்குகள் எல்லாம் மாயமாகி விடுகின்றன.

அந்த வகையில் பாஜகவில் சேர்ந்தவர்தான் காங்கிரஸை சேர்ந்த மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவான். பாஜகவில் சேர்ந்ததும் அவரை ராஜ்யசபா உறுப்பினராக பாஜக நியமித்தது. அவரால் கட்சிக்கு பெரும் ஆதரவு வந்துசேரும் என பாஜக எதிர்பார்த்த நிலையில், பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தனது சொந்த தொகுதியிலேயே ஒரு சிறிய கூட்டத்தை கூட சேர்க்க முடியாமல் அசோக் சவான் திணறி வருகிறார்.

காங்கிரசின் மூத்த தலைவராக இருந்து திடீரென பாஜகவில் சேர்ந்ததால் அசோக் சவானின் ஆதரவாளர்கள் கூட அவரை மதிக்காத நிலை நிலவுதாகவும், இதன் காரணமாக ஒரு சிறிய கூட்டத்தை கூட அசோக் சவானால் கூட்ட முடியவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பாஜக அணியில் சேர்ந்ததும் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அஜித் பவார்- வேலை செய்த மோடி வாஷிங் மெஷின்!