Politics
மோடி ஆட்சியில் ஏழைகளின் ‘தங்கம்’, பணக்காரர்களுக்கு செல்கிறது : RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
வெறுப்பு பேச்சுகளை முன்மொழிவதில், ஆர்.எஸ்.எஸ் தலைமைகளை மிஞ்சத் தொடங்கியிருக்கிறார் மோடி.
நாட்டில் சொத்துகள் இஸ்லாமியர்கள் வசம் செல்கிறது, தங்க நகைகள் இஸ்லாமியர்கள் வசம் செல்கிறது என நாட்டை 10 ஆண்டுகளாக ஆளும் பிரதமர் அப்பட்டமான பொய்களை பிரச்சார உரையாக முன்மொழிந்து வருகிறார்.
அதனால், எதிர்க்கட்சிகளாலும், சமூக ஆர்வலர்களாலும் மட்டுமே சர்வாதிகாரி என அழைக்கப்பட்டு வந்த மோடி, தற்போது இந்திய குடிமக்களாலும் சர்வாதிகாரி என அழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவ்வகையில், அண்மையில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்து பெண்களின் தங்க நகை மற்றும் தாலி இஸ்லாமியர்களுக்கு தாரைவார்க்கப்படும்” என சற்றும் ஏற்க இயலாத வகையில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “என் பாட்டி தனது தாலியை நாட்டை காப்பாற்றும் போருக்காக கொடுத்தார். என் அம்மா தனது தாலியை தேசத்திற்காக தியாகம் செய்தார். இது எதையும் தெரிந்துகொள்ளாத நரேந்திர மோடி தாலியின் முக்கியத்துவத்தை எப்படி புரிந்துகொள்வார்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், RBI வெளியிட்ட தகவல், மோடியின் மூக்கை மீண்டும் ஒரு முறை உடைக்க செய்துள்ளது.
RBI தகவலின் படி, கடந்த 10 ஆண்டுகளில் உழைக்கும் மக்களின் வருவாய் கணிசமாக குறைந்து வருகிறது. பணக்காரர்களின் சொத்து மதிப்பு வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது.
ஆகையால், அத்தியாவசிய தேவைக்காக, உழைக்கும் மக்கள் தங்களது தங்க நகைகளை அடமானம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கோவிட் பெரும் தொற்றிற்கு பிறகு, செப்டம்பர் 2020 முதல் செப்டம்பர் 2021-க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், நகை அடமானம் வைத்து, சுமார் ரூ. 40,080 முதல் ரூ. 63,770 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், காங்கிரஸ் மீது மோடி வைத்த குற்றச்சாட்டு அப்படியே திரும்பி, மோடியின் முகத்திரையை கிழித்துள்ளது.
எனினும், தேசிய ஊடகங்களை தன் பக்கம் ஈர்த்து இச்செய்தி வெளிவரவிடாத அளவில் வேலைகளை செய்து வருகிறது பா.ஜ.க.
ஆனால், அதிலும் மூக்குடைக்கப்பட்டு, உலகளவில் மோடியின் சர்வாதிகாரத்தன்மை அம்பலப்பட்டு வருவது, மோடிக்கும் அவரது ஆட்சிக்கும் மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!