Politics

கேள்விகளுக்கு பயப்படும் பா.ஜ.க! : மோடியில் தொடங்கி தேஜஸ்வி சூர்யா வரை தொடரும் மழுப்பல்கள்!

இந்தியாவின் பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து ஆட்சி புரியும் மோடி, பிரதமராவதற்கு முன்பிலிருந்தே செய்தியாளர்களை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.

காரணம், 2002 ஆம் ஆண்டு மோடி பீகார் மாநில முதல்வராக இருந்த போது, நடந்த கலவரத்தில் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டது. இஸ்லாமியர்கள் பலர் சொந்த வீடுகளை விட்டே வெளியேறி, இன்றளவும் தங்களின் இருப்பிடங்களுக்கு திரும்பாத வண்ணம் வன்முறை தாக்கம் ஆழமானதாக பதிந்தது.

அப்போது, அக்கலவரம் தொடர்பாக மோடி அளித்த பேட்டியில், கலவரம் குறித்து சற்றும் கவலைக்கொள்ளாத போக்கில் விடையளித்திருந்தார். அதனால், கலவரம் எளிதில் முடியாததற்கு மோடியும் காரணமாய் அமைந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

ஆகையால், அப்போது முதல் எங்கு நம் அதிகாரத்துவ எண்ணம் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், செய்தியாளர்களை சந்திப்பதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறார் மோடி.

எனினும், மக்கள் அது குறித்து கேள்வி எழுப்பிடக்கூடாது என்பதற்காக, அவ்வப்போது Scripted Interview-ல் பங்குபெற்று வருகிறார். அதாவது, முன்கூட்டியே கேள்விகளை கலந்துரையாடி, போலியாக ஒரு நேர்காணலை முன்னெடுத்து வருகிறார்.

அப்படிப்பட்ட நேர்காணலிலும் உண்மை பேசுகிறாரா என்றால், அதுவும் இல்லை. அண்மையில் ANI-க்கு மோடி அளித்த பேட்டியில், “தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையை நிறுவுவதற்காக கொண்டுவரப்பட்டது. தேர்தல் பத்திரத்தின் வழி பா.ஜ.க பெற்ற தொகை 37% (ரூ. 6,100 கோடி) தான்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பசியில்லா வகையில், 2047-ல் அனைவருக்கும் உணவளிக்கப்படும்” என்ற உறுதியையும் முன்மொழிந்துள்ளார்.

இது குறித்து, காங்கிரஸ் MP ஜெய்ராம் ரமேஷ், “தேர்தல் பத்திரத்தின் மூலம், பா.ஜ.க ரூ. 8,200 கோடி பெற்றது என்று உச்சநீதிமன்றத்தின் வழி இந்தியர்கள் அனைவருக்கும் தெரியப்பட்டாலும், தெரியாமல் கூட உண்மை பேச கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் மோடி” என கண்டனம் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விவசாயிகள் தற்கொலை, வரி என்ற பெயரில் தொழிலதிபர்களை துன்புறுத்தல், இவை எல்லாவற்றிற்கும் மேலாக உலகின் மிகப்பெரிய ஊழலான தேர்தல் பத்திர ஊழல். இப்படியாக 10 வருடத்தை கழித்துவிட்டு, பசியின்மையால் வாடுபவர்களுக்கு 2047-ல் முழு உணவை வழங்கப்போகிறாராம் பிரதமர் மோடி” என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஊடகங்கள் மற்றும் மக்களின் கேள்விகளுக்கு மோடி எவ்வாறு பயந்து ஓடுவதை வழக்கமாக வைத்துள்ளாரோ, அதே முறையை தற்போது தெற்கு கர்நாடக MP தேஜஸ்வி சூர்யாவும் பின்தொடர தொடங்கியுள்ளார்.

அவ்வகையிலேயே, 2024 மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி சூர்யா தேர்தல் பிரச்சாரத்தின் போது, பா.ஜ.க மோசடியால் கூட்டுறவு வங்கியில் பணமிழந்த முதலீட்டாளர்கள், தங்களது பணம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்க, அதற்கு பதிலளிக்க இயலாமல் பின் வாயில் வழியாக தப்பித்து ஓடியுள்ளார் தேஜஸ்வி.

அவர் தப்பித்து செல்வதான காணொளியும் இணையத்தில் வெளியாகி, கோடிக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இவ்வாறு ஜனநாயகத்தின் நான்காவது பெரிய தூண் எனப்படும் ஊடகத்திடமிருந்தும், ஜனநாயகத்தின் ஆணிவேரான மக்களிடமிருந்தும் வரும் கேள்விகளையும், கோரிக்கைகளையும் புறந்தள்ளும் பா.ஜ.க தலைவர்கள், ஆட்சி மோகம் கொண்டு வாக்குக்காக மட்டும் மக்களிடையே Road Show நடத்தி வருவது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Also Read: “நம் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது : பாஜக ஏன் வரவே கூடாது?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் !