Politics
மூன்று மாநிலங்களால் மூச்சு திணறும் பா.ஜ.க! : தேர்தலுக்கு முன்பே உறுதியான ஆட்சி மாற்றம்!
கடந்த 2019 மக்களவை தேர்தலில் பீகார், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் அனைத்து இடங்களையும் பா.ஜ.க கைப்பற்றியது.
மொத்தமாக கிடைத்த இந்த 116 தொகுதிகளால் தான் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க பெரும்பான்மை பெற்று ஆட்சியையும் அமைத்தது.
எனினும், இந்த முறை அந்த மூன்று மாநிலங்களிலும் வெற்று இடமே பா.ஜ.க-விற்கு கிடைக்கும் என தேர்தல் கணிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பா.ஜ.க மிகவும் பலம் வாய்ந்த கட்சி என மோடி பிரச்சாரம் செய்து வந்தாலும், கூட்டணி கட்சிகளே பா.ஜ.க.வின் வெற்றிக்கு உந்துதலாக இருந்து வருகிறது.
ஆனால், கடந்த தேர்தலின் போது கர்நாடகா-வில் கடந்த முறை ஆட்சியில் பா.ஜ.க, தலைமையின் குழப்பத்தால் ஆட்சியையும் பறிகொடுத்து இருக்கிறது.
பீகாரில் நிதிஷ்குமாரும் பழைய செல்வாக்கோடு இல்லை. தன்னுடைய பதவி ஆசைக்காக மாறிமாறி கூட்டணி வைக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் தன்னல அரசியலால் அம்பலப்பட்டு நிற்கிறார் . மூழ்கும் கப்பலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிதிஷ் உடன் சேர்ந்து மூழ்க பா.ஜ.க.வும் கூட்டணி தாவலில் ஈடுபட்டிருக்கிறது .
மக்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கும் இந்த தன்னல கூட்டணியை தண்டிக்கவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், பீகாரை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் கூட்டணியில் இருந்த சிவசேனா ஆட்சியையே கவிழ்த்தார்கள் பா.ஜ.க.வினர். அதோடு மட்டுமல்ல சிவசேனா கட்சியை பிரித்து உத்தவ் தாக்கரேவிடம் இருந்து கட்சியை பிடுங்கி, சின்னத்தை பறித்து அலையவிட்டார்கள். மூத்த தலைவர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் உடைத்து, அவரது சகோதரர் அஜித்பாவரை கொண்டே சரத்பவார் முதுகில் குத்தியுள்ளனர்.
இந்த அரசியல் அட்டூழியங்களை கண்டு, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு மாநில கட்சிகளின் தொண்டர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மக்களும் பா.ஜ.க-வின் மீது கடும் சினத்தில், தேர்தலை நோக்கி காத்திருக்கின்றனர்.
மேலும், எப்பொழுதும் தனக்கான குறுக்குவழி அரசியலை மேற்கொள்ளும் பா.ஜ.க-வை வேறோடு வீழ்த்த, இந்தியா கூட்டணி தலைவர்களும் இரவு-பகல் பாராமல் களமாடி வருகின்றனர்.
இந்தியா கூட்டணியின் தேர்தல் உத்திகளுக்கு முன்பு, பா.ஜ.க கூட்டணியால் வேட்பாளர்களை கூட உருப்படியாக தேர்ந்தெடுக்க முடியாத சூழலும் உருவாகியுள்ளது.
பா.ஜ.க-வின் ஆழம், அகலத்தை தெரிந்த அனுபவமிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் இருப்பதால், இம்மூன்று மாநிலங்களின் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க.வின் வெற்று வாய்மொழிகள் திக்குமுக்காடி வருகிறது.
அதனால், பீகாரில் 40, மகாராஷ்டிராவில் 48, கர்நாடாகாவில் 28 என கடந்த முறை வெற்றி முகத்தில் இருந்த பா.ஜ.க, இந்த முறை படுதோல்வியடைய காத்திருக்கிறது.
பாசிசத்தை வீழ்த்த இந்தியாவை காக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இரவு பகல் பாராது முழக்கமிட்டு வருகிறார்.
“தமிழ்நாட்டில் பா.ஜ.க காலுன்ற விடாமல் களமாடும் அதே நேரத்தில் பா.ஜ.க வேர்விட்டு பரவி இருந்த மாநிலங்களிலிருந்தும் புடுங்கியெரிய, தமிழ்நாடு முதலமைச்சர் வகுத்து தந்த உத்திகள் பெரிய அளவில் உதவி இருக்கிறது” என உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்களும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
தனி தனியாக சென்று பாசிசத்தை வீழ்த்த முடியாது, இந்தியாவாக ஒன்றிணைந்தால் வென்று காட்டலாம் என்பதற்கான அடையாளமாக இந்த மூன்று மாநிலங்களின் வெற்றி ஒன்றியத்திற்கான விடியலாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!